கடனை திருப்பி கேட்ட கர்ப்பிணி பெண் மீது கத்திகுத்து

0
214

(பாறுக் ஷிஹான்)

கடன்கொடுக்கல் வாங்கல் காரணமாக ஏற்பட்ட தகராறின் போது ஆறு மாதக் கர்ப்பிணி மீது கத்திக் குத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று(21)இடம்பெற்ற குறித்த சம்பவத்தின்போது வீமன்காமத்தைச் சேர்ந்த 31 வயதுடைய சுகந்தினி என்னும் கர்ப்பிணி பெண்ணே இவ்வாறு கத்திக்குத்திற்கு இலக்கான நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவராவார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

குறித்த பெண்மணி அயலில் உள்ள குடும்பத்திற்கு வழங்கிய கடன் தொடர்பில் அதனை மீளச் செலுத்தக்கோரி நேற்றைய தினம் கேட்டள்ளார்.

இதன் போது ஒரு கட்டத்தில் வாய் தர்க்கமாக மாறி இரு தரப்பினரும் சச்சரவில் ஈடுபட்டுள்ளனர். இதன் போது ஒரு கட்டத்தில் குறித்த கர்ப்பிணித் தாய்மீது வாக்குவாதத்தில் ஈடுபட்டவர் கத்தியால் குத்தியுள்ளார்.

இதனையடுத்து வயிற்றுப் பகுதியில் கத்திக் குத்திற்கு இலக்கான பெண் உடனடியாகவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வைத்தியர்களின் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். இதேநேரம் குறித்த சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிசாரிடம் முறையிடப்பட்டுள்ளதனையடுத்து பொலிசார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here