500 க்கும் மேற்பட்ட கட்டார் பிரஜைகள் ஹஜ் கடமையை நிறைவேற்றினர்!

0
535

எம்.ஐ அன்வர் (ஸலபி)

சவூதி மற்றும் கட்டார் அரசியல் முரண்பாட்டைத் தாண்டி இம்முறை 500 க்கும் மேற்பட்ட கட்டார் நாட்டவர் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக சவூதி வந்தடைந்தனர். கடந்த ஆண்டு ஏற்பட்ட கட்டார்-சவூதி அரசியல் முரண்பாட்டை காரணம் காட்டி இம்முறை ஹஜ் கடமைக்கு செல்வதற்கு கட்டார் அரசு தனது நாட்டு மக்களுக்கு தடை விதித்திருந்தது.

ஹஜ் செல்ல விரும்பும் கட்டார் பிரஜைகள் விண்ணப்பிப்பதற்காக சவூதி அரசால் வழங்கப்பட்டிருந்த இணைய மூலமான சேவையை கட்டார் அரசு தடை செய்திருந்தது. எனினும் சவூதி ஹஜ் மற்றும் உம்ரா விவகாரங்களுக்கான அமைச்சு கட்டார் நாட்டவருக்கான ஹஜ் விண்ணப்பத்திற்கான புதிய இணைய வழி சேவையை மீண்டும் அறிமுகம் செய்திருந்தது. அல்ஜசீரா போன்ற ஊடகங்கள் தமது நாட்டவர் எவரும் ஹஜ்ஜூக்கு செல்லவில்லை என்றும் சவூதி அரேபியா ஹஜ்ஜை அரசியல் மயப்படுத்துகிறது போன்ற பொய்யான செய்திகளை வழமை போன்று பரப்பியிருந்தனர்.

உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுதல், தீவிரவாத செயற்பாடுகளுக்கு நிதி உதவி வழங்குதல் போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து சவூதி, ஐக்கிய அமீரகம், பஹ்ரைன் மற்றும் எகிப்து போன்ற அரபு நாடுகள் கட்டாருடனான தமது இராஜதந்திர உறவுகளை கடந்த வருடம் பகிஷ்கரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது!

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here