ரிதிதென்னையில் எழுபது தென்னை மரங்களை சேதப்படுத்திய இரண்டு யானைகள்

0
357

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

மட்டக்களப்பு வெலிக்கந்தை எல்லையிலுள்ள வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மீள்குடியேற்றக் கிராமமான ரிதிதென்னை பகுதியில் யானைகளின் அட்டகாசத்தினால் பல பயிர்கள் சேதமடைந்துள்ளதாக கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ரிதென்னை பாலர் பாடசாலை வீதியில் வசிக்கும் ஐந்து நபர்களின் வீட்டுத் தோட்டத்தினுள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இரண்டு மணியளவில் வருகை தந்த இரண்டு யானைகளினால் பல பயிர்கள் சேதமாக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இரண்டு மணிக்கு வருகை தந்த யானைகளினால் எழுபது தென்னை மரங்கள் மற்றும் மரவள்ளி, வாழை மரம், பச்சாசி மரம் உட்பட்ட பல சேனைப் பயிர்களை சேதப்படுத்தியுள்ளது.

வெலிக்கந்தை அசேலபுரம் குளத்தின் வழியாக வந்த இரண்டு யானைகள் தென்னை மரங்களை சேதப்படுத்தும் வேளையில் துரத்த முற்பட்ட போது வீட்டின் உரிமையாளர்களை அடிப்பதற்கு யானை துரத்தியதாகவும், பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு யானைகளை துரத்தியதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வியடம் தொடர்பாக பல தடவை யானையில் இருந்து பாதுகாக்க யானை வேலி அமைத்து தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்ததாகவும், இவ்விடயமாக எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே யுத்தத்தில் இடம்பெயர்ந்து மீண்டும் மீள்குடியேறிய எங்களை யானையின் மூலம் திரும்பமும் இடம்பெயர வைக்காமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யானை வேலி அமைத்து தருமாறு பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here