தாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் சாதனை மாணவர்கள் கௌரவிப்பும் சஞ்சிகை வெளியீடும்

0
444

ஓட்டமாவடி – தியாவட்டவான் அரபுக் கல்லூரியின் பெற்றார் பாதுகாவலருடனான சந்திப்பு 08.20.2018 ஆம் திகதி மீராவோடை தாருஸ்ஸலாம் ஜும்ஆப் பள்ளிவாயலில் காலை 10.00 தொடக்கம் 12.00 மணி வரை நடைபெற்றது. குறித்த சந்திப்பின்போது மாணவர்களது இரண்டாந் தவனைப் பரீட்சை பெறுபேறுகள் வழங்கும் நிகழ்வு , அஸ்-ஸலாம் சஞ்சிகை வெளியீடு , மதீனா சர்வதேச பல்கலைக்கழகம், ஹாலித் பல்கலைக்கழகம் என்பவற்றிற்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு மற்றும் ஆறரை மாதங்களில் அல்குர்ஆனை மனனம் செய்த மாணவரை கௌரவிக்கும் நிகழ்வு, 2017 ஆண்டிற்கான முன்மாதிரி மாணவர் கௌரவிப்பு என்பன நடைபெற்றன.

குறித்த நிகழ்வுகளை ஆரம்பித்து வைக்கும் முகமாக கல்லூரியின் செயலாளர் ஏ.எல்.முஸ்தபா(ஸலாமி) அவர்களினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டதுன், தலைமையுரையினை கல்லூரியின் முதல்வர் எம்.பீ.எம்.இஸ்மாயில்(மதனி) அவர்கள் நிகழ்த்தினார்கள். அதனைத் தொடர்ந்து ஷரீஆப் பிரிவு மாணவர்களுக்கான பரீட்சைப் பெறுபேறுகள் கல்லூரியின் உப அதிபர் ஏ.எச்.எம்.இர்பான்(நஹ்ஜி) அவர்களினால் அறிவிக்கப்ட்டது, அடுத்து ஹிப்ளுப் பிரிவு மாணவர்களுக்கான பெறுபேறுகள் வழங்கும் நிகழ்வினை எச்.எஸ்.ஹபீஸ் (ஜவாதி) அவர்கள் நடாத்தினார்கள். அதனை அடுத்து கல்லூரின் தலைவர் ஏ.எல்.பீர் முஹம்மது (காஸிமி) அவர்களினால் விஷேட உரையொன்று நிகழ்த்தப்பட்டது.

இரண்டாவதாக அஸ்ஸலாம் சஞ்சிகை வெளியீடு நான்காம் வருட மாணவர்களினால் நடாத்தப்பட்டது. குறித்த சஞ்சிகையானது துல்ஹஜ் மாத சிறப்பிதழாக அமைந்ததுடன் நான்கம் வருட மாணவர்களின் இரண்டாவது இதழ் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து மதீனா இஸ்லாமியப் பல்கலைக்கழககம் மற்றும் ஹாலித் சர்வதேச பல்கலைக்கழகம் என்பவற்றிற்குத் தெரிவான மாணவர்கள் கௌரவிப்பு, குறுகிய காலத்தில் அல்குர்ஆனை மனனம் செய்த (ஆறரை மாதங்கள்) மாணவர் அல்ஹாபிழ் ஷியாம் ஸபீக் அவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வும், 2017 ஆம் ஆண்டிற்கான முன்மாதிரி மாணவர் கௌரவிப்பு என்பன நடைபெற்றது. இந்நிகழ்வினை கல்லூரியின் அதிபர் எம்.பீ.எம்.இஸ்மாயில்(மதனி) அவர்கள் நடாத்திவைத்தார்கள்.

அதனைத் தொடர்ந்து பெற்றார் பாதுகாவலருடனான கலந்துடையால் நடைபெற்றது. அங்கு கல்லூரியில் காணப்படும் குறை, நிறைகள் தொடர்பாகவும் கல்லூரியின் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது.

எம்.எஸ்.எம்.ஹில்மி ஸலாமி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here