கல்குடா தௌஹீத் ஜமாஅத்யின் ஏற்பாட்டில் 31 ம் திகதி மாதாந்த தர்பியா நிகழ்ச்சி

0
313

(ஊடகப்பிரிவு)

கல்குடா தௌஹீத் ஜமாஅத்யின் தஃவாப் பிரிவு ஏற்பாடு செய்துள்ள மாதாந்த தர்பியா நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் இம்மாதம் 31 ம் திகதி வெள்ளிக்கிழமை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வானது மீராவோடை தாருஸ்ஸலாம் ஜும்ஆ பள்ளிவாயலில் நடைபெறவுள்ளது.

பெண்கள் நிகழ்ச்சி அன்றையதினம் பி.ப. 4:30 மணி தொடக்கம் 5:30 மணி வரைக்கும் ஊடகங்களினால் சீரழியும் முஸ்லிம் குடும்பங்கள் எனும் தலைப்பிலும்

ஆண்கள் நிகழ்ச்சியானது மஃரிப் தொழுகை முதல் 09:30 மணி வரைக்கும் மார்க்கத்தை  கற்றுக் கொள்வதில் முஸ்லிம்கள் அன்றும் இன்றும், சுவர்க்கம் செல்லும் தூய்மையான உள்ளங்கள், இன்றைய மரணங்களும் நாம் பெறும் படிப்பினைகளும் ஆகிய தலைப்புக்களில் சொற்பொழிவுகள் நடைபெறவுள்ளன.

இந்நிகழ்வில் வளவாளர்களாக இலங்கை கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எஸ்.எல்.எம்.நஸ்மல் (பலாஹி), நாவலடி மர்கஸ் அந்நூர் அரபுக் கல்லூரியின் அதிபரும் கல்குடா தௌஹீத் ஜமாஅத்யின் நிருவாகத் தலைவருமான ஏ.ஹபீப் (காசிமி), நாவலடி மர்கஸ் அந்நூர் அரபுக் கல்லூரியின் உப அதிபர் வீ.ரீ.எம்.முஸ்தபா தப்லீகி ஆகியோர்கள் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர்.

இந்நிகழ்வில் அனைத்து சகோதரிகள், தாய்மார்கள், சகோதரர்கள் அனைவரையும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கல்குடா தௌஹீத் ஜமாஅத் அன்புடன் வேண்டிக்கொள்கின்றது.

வெளிநாடுகள் மற்றும் வெளியூர்களில் வசிக்கும் உறவுகள் அன்றையதினம் இடம்பெறும் நிகழ்வுகளை எமது இணையத்தளத்தின் உத்தியோகப்பூர்வ முகநூல் வாயிலாக பார்த்துப் பயன் பெறலாம்

Kalkudahnation

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here