வழியனுப்பியது கல்குடா தௌஹீத் உலமாக்கள் ஒன்றியம்

0
427

(ஊடகப்பிரிவு)

எமது கல்குடா முஸ்லிம் பிரதேசத்திலிருந்து இம்முறை (2018) சவுதி அரேபிய பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகி பயணமாகவுள்ள மௌலவி மாணவர்களை கௌரவித்து வழியனுப்பும் நிகழ்வு கல்குடா தௌஹீத் உலமாக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 2018.08.30ம் திகதி வியாழக் கிழமை பி.ப. 04.30 மணியளவில் மீராவோடை எம்.பீ.சீ.எஸ் வீதியில் அமைந்துள்ள தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் ஒன்றியத்தின் தலைவர் அஷ் ஷெய்க் எம்.ரீ.அப்துர்ரஹ்மான் (அஸ்ஹரி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதில் பிரதம அதிதிகளாக ஜம்இய்யதுத் தஃவதில் இஸ்லாமிய்யா கல்குடாவின் பொதுத் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எல். பீர் முஹம்மத் (காஸிமி) அவர்களும் நாவலடி மர்கஸ் அந்நூர் கல்வி நிறுவனத்தின் அதிபர் அஷ்ஷெய்க் ஏ. ஹபீப் (காஸிமி) அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் பல்கலைக்கழகம் செல்லவுள்ள மாணவர்கள் (மௌலவிமார்கள்) தஃவாப் பணியில் எமது பிரதேசத்தின் தேவைகளை கருத்திற் கொண்டு கல்வி நடவடிக்கைகளை செயற்படுத்த வேண்டும் எனவும் இளங்கலையோடு நிறுத்தி விடாமல் முதுமானி மற்றும் கலாநிதிப் படிப்புக்களை முடியமான வரை தொடர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.

இந்நிகழ்வில் சவுதி அரேபிய அப்ஹா பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள ஏ.ஆர்.எம். இர்ஷாத் (ஸலபி), எம்.எம். இல்முதீன் (காஷிபி) அவர்களும் றியாத் மஜ்மஃ பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள எச்.எல். ஹுமைஸ் அவர்களும் மதீனா இஸ்லாமிய்யா பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள ஏ.எம். நிஸாம் (ஸலாமி), சீ.எம்.எம். புர்ஹான் (ஸலாமி), ஐ.எம். பைசான் முகைதீன் (ஸலாமி), எம்.எஸ்.எம். சியாம் (ஸலாமி), எஸ்.எம். இஸ்ஹாம் (நஹ்ஜி), எம்.பீ.எம். சியாம் (ஹலீமி) அவர்களுமாக மொத்தம் 09 மாணவர்கள் இலட்சினைகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

இங்கு வருகை தந்திருந்த ஜம்இய்யதுத் தஃவதில். இஸ்லாமிய்யா கல்குடாவிற்கான உலமாக்கள் ஒன்றிய இணைப்பாளர் அஷ் ஷெய்க் ஏ.எல். முஸ்தபா (ஸலாமி) மற்றும் ஒன்றிய நிருவாகிகளடங்களாக கனிசமான உலமாக்களின் பங்கு பற்றுதலுடனும் இவர்களது ஈருலக வாழ்க்கையின் வெற்றிக்கான பிரார்தனையுடனும் நிகழ்வு முடிவுற்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here