ஊடகவியலாளர் மரைக்காரை போன்று எம்.பியாக போகும் ஊடகவியலாளர் முசாரஃப்

0
166

(ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்)

வசந்தம் தொலைக்காட்யில் முக்கிய ஊடகவியலாளராக கடமையாற்றிய முசாரஃப் அகில இலங்கை மக்கள் காங்கிரசினுடைய கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளராக கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதுர்தீனினால் மாந்தையில் வைத்து நியமிக்கப்பட்டுள்ளார். இந்த திடீர் மாற்றமானது நாட்டில் முக்கிய ஊடகவியலாளராக கடமையாற்றிய மரைக்கார் ஐக்கிய தேசிய கட்சியின் மூலம் அரசியலுக்கு தீடீரென பிரவேசித்து மேல் மாகாண சபை மற்றும் அதனை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினரானதை போன்று முசராஃபும் எதிரே வருகின்ற மாகாண சபை மற்றும் பாராளுமன்ற தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக வருகின்ற மாகாண சபை தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் களமிறக்கப்படலாம் என பெரிதும் எதிர்பார்க்கபட்டு பேசப்படும் விடயமாக மாறியுள்ளது.

எனவே இந்த நிலைமையினை வைத்து பார்க்கின்ற பொழுது கடந்த காலங்களில் தான் நடாத்திய அரசியல் சார்ந்த நிகழ்சியில் முஸ்லிம் காங்கிரசினுடைய தலைமையினை அழைத்து பல கேள்விகளை தொடுத்து அதற்கான பல விடைகளை அமைச்சர் அப்துர் றவூப் ஹக்கீமிடமிருந்து எதிர்பார்த்தமையானது ஏற்கனவே ஒரு அரசியல் கட்சியின் நிகழ்சி நிரலுக்கு அமைவாகவே இடம் பெற்றிருக்கலாம் என்பதனை இவ்வாறான முடிவுகளும் முசாஃபினுடைய மாற்றங்களும் ஒப்புவிக்கும் விடயமாக நிரூபிக்க கூடியதாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here