கல்குடா பகுதியில் மூன்றாம் கட்ட குடிநீர் வேலைத்திட்டம் பதின்மூவாயிரம் மில்லியன் ரூபாவில் ஆரம்பிபக்கப்படவுள்ளது 

0
262

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் செயலக கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை (03.09.2018) மாலை நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது

இதன் போது நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட குடி நீர் வழங்கல், பிரதேசங்களின் உள் வீதிகளின் அபிவிருத்திகள் மற்றும் ஓட்டமாவடி மீறாவோடை ஆற்று தடுப்புசுவர் தொடர்பில் ஆராயப்பட்டது.

இதன் போது காவத்தமுனை பிரதேசத்தில் ஒரு பகுதியில் நீர் பாவிப்பதற்கு உகந்ததாக இல்லை என்றும் அப்பகுதி மக்களின் நலன் கருதி குழாய் நீர் திட்டத்தை பெற்றுத்தருமாரும் காவத்தமுனை முஸ்லீம் காங்கிரஸ் பிரதேச சபை உறுப்பினர் ஜெஸீமா முன்வைத்த போரிக்கைக்கு கல்குடாத் தொகுதிக்கான முதலாம் கட்ட குழாய் நீர் திட்டம் முடிவடைந்துள்ள நிலையில் இரண்டாம் கட்டம் இன்னும் இரண்டு வாரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் மூன்றாம் கட்ட வேலைத்திட்டம் பதின்மூவாயிரம் மில்லியன் ரூபாவில் ஆரம்பிபக்கப்படவுள்ளதாகவும் அத்திட்டம் நிறைவு செய்யப்படும் பட்சத்தில் கல்குடாத் தொகுதியில் உள்ள அனைத்து பிரதேசத்திற்குமான குடி நீர் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டது.

குழாய் நீர் திட்டம் முடிவடைவதற்குள் காவத்தமுனையில் குடி நீர் இன்றி பாதிக்கப்பட்ட மக்களின் அவசர தேவையை கருத்திற்கொண்டு குழாய் கிணறு ஒன்றை அமைத்து அதன் மூலம் நீரை பெற்றுத்தருவதற்கான வசதிகளை செய்து தருவதாகவும் அமைச்சர் வாக்குறிதியளித்தார்.

இக் கூட்டத்தில் தேசிய நல்லிணக்க அரச கரும மொழிகள் பிரதியமைச்சர் அலி ஸாஹீர் மௌலானா, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூத், அமைச்சரின் இணைப்பு செயலாளர் யூ.எல்.எம்.முபீன், ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளர் எச்.எம்.எம்.ஹமீம்;, ஓட்டமாவடி பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத்; மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் பிரதேச சபை உறுப்பினர்கள் அமைச்சின் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here