வாழைச்சேனையில் கேரளா கஞ்சாவுடன் இராணுவ வீரர் ஒருவர் பெண் ஒருவருமாக ஐந்து பேர் கைது

0
283

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

கேரளா கஞ்சா பதின்ஆறு (16) கிலோ கிராமுடன் இராணுவ உத்தியோகத்தரும் பெண் ஒருவர் உட்பட ஐந்து பேர் கைது செய்யபட்டடுள்ளதுடன் அதற்கு பயன்படுத்திய இரண்டு கார்களும் இன்று (வியாழக்கிழமை) காலை கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஜய பெரமுன தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து வாழைச்சேனை பகுதிக்கு கேராளா கஞ்சாவினை விற்பனைக்காக கொண்டுவந்துள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வாழைச்சேனை பொலிஸ் நிலைய போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.சிவதர்சன் தலைமையில் சென்ற பொலிஸ் நிலைய இரகசிய தகவல் உத்தியோகத்தர் எம்.டபள்யூ.தினுச மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட நடவடிக்கையின் போது வாழைச்சேனை விபுலானந்தா வீதியில் வைத்து இரண்டு கார்களையும் இராணுவ வீரர் ஒருவர் பெண் ஒருவருமாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவ வீரர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிங்களவர் என்றும் ஏனைய நான்கு பேரும் அனுராதபுரம் மற்றும் வவுனியா மாவட்டங்களை சேர்ந்த தழிழர்கள் என்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

சந்தேக நபர்கள் வாழைச்சேனை விபுலானந்தா வீதியில் வைத்து ஒரு வாகனத்தில் இருந்து மற்றய வாகனத்திற்கு கஞ்சா பொதிகளை மாற்றுவதற்கு தயாராக இருந்த நிலையில் இரண்டு கிலோ கிராம் எடைகொண்ட எட்டு பார்சல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இதன் மொத்த எடை பதினாறு கிலோ கிராம் என்றும் கஞ்சாவின் பெறுமதி பதினாறு லட்சம் ரூபா என்றும் பொலிஸார் தெரிவித்தானர்.

கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டவர்களுடன் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் தொடர்புடையவர்கள் எவரும் இருக்லாம் என்ற சந்தேகத்தில் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here