வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த (EYO-SRILANKA) வின் இலவச தலைமைத்துவம், தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு

0
205

(எஸ்.அஷ்ரப்கான்)

கிழக்கு இளைஞர்கள் அமைப்பு சிறீ லங்கா (EYO-SRILANKA) வின் இலவச தலைமைத்துவம் மற்றும் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு கடந்த (09) ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது பேர்ல்ஸ் வரவேற்பு மண்டபத்தில் அமைப்பின் ஸ்தாபக தலைவரும், முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமான தாணீஷ் றகுமத்துல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.

கிழக்கு இளைஞர்கள் அமைப்பு-ஸ்ரீலங்கா (EYO-SRILANKA), எமினென்ஸ் சொப்ட் சொலுசன் பிறைவட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து அம்பாறை மாவட்ட இளைஞர்களுக்கு ஏற்பாடு செய்த இக்கருத்தரங்கில் சிறப்பு அதிதியாக கிழக்கு இளைஞர்கள் அமைப்பின் ஆலோசனை சபை பணிப்பாளர் நிசாம் மாயல், எமினென்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.ஏ.எம்.மாஹிர், கிழக்கு இளைஞர்கள் அமைப்பின் செயலாளர் முபாரக் முஸ்தபா, EMINENCE நிறுவனத்தின் ஆலோசகர்களான பொறியியலாளர்களான நியாஸ், றிஷாட் மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள், இளைஞர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here