ஆனைக்கோட்டையில் விடுவிக்கப்பட்ட வீடுகளை துப்பரவு செய்யும் உரிமையாளர்கள்

0
178

(பாறுக் ஷிஹான்)

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை கூழாவடி இராணுவம் இருந்த 7 வீடுகளும் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் கடந்த 6 ஆம் திகதி முழுமையாக விடுவிக்கப்பட்ட நிலையில் வீடுகளின் உரிமையாளர் தங்கள் வீடுகள் காணிகளை சுத்தம் செய்து வருகின்றனர்.

வீடுகள் பாவனையற்ற நிலையில் வீடுகளின் சுவர்கள் வெடித்த நிலையில் காணப்படுகிறது. கூரைகளின் ஓடுகள் உடைந்துள்ளதுடன் இராணுவம் இருந்த வீடுகளின் கூரைகள் ஓடுகள் இல்லாத பகுதிகளில் தகரங்கள் அடிக்கப்பட்டுள்ளன மேலும் வீடொன்றை சமையல் செய்வதற்கு பயன்படுத்தி சுவர்கள் வெடித்து கரிமயமாக உள்ளது.

அங்குள்ள வைத்தியர் ஒருவரின் மேல்மாடி வீடு முகாம் உயர் அதிகாரிகள் தங்கயிருந்ததுடன் முதன்மை கட்டமாக பயன்படுத்தியமையால் நல்ல நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

விடுவிக்கப்பட்ட காணியில் இராணுவத்தினர் பப்பாசி, வாழை தோட்டம் என்பனவும் பயிரிட்டுள்ளனர்.

எனினும் கடந்த ஆட்சியில் இந்த காணி வீடுகளை 11 ஆவது சிங்கறெஜிமென்ட் பி அணியின் இராணுவத்திற்கு சுவீகரிக்க இருந்த நிலையில் போராட்டம் நடத்திய போது, 2015 ஜனவரியில் ஆட்சி மாற்றத்தின் பின் காணி சுவீகரிகரிப்பை நிறுத்துமாறு உத்தரவிட்டு எங்களுக்கு இந்த வீடுகளையும் காணியையும் மீள எம்மிடமே தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இதற்கு நடவடிக்கை எடுத்த அரச அதிபர், கிராம சேவையாளர், யாழ்ப்பாணம் இராணுவ கட்டளை தளபதிக்கும்காணி உரிமையாளர்கள் தமது நன்றியை தெரிவித்தனர்.

இதேவேளை இவ் வீடுகளை உடைத்து மீள புனரமைப்பு செய்ய முடியாது எனவும். அரச அதிபர் மீள்குடியேற்ற அதிகாரிகள் எமது வீடுகளை வந்து பார்வையிட்டு தமக்கு வீட்டுதிட்டத்தினை பெற்று தருமாறும் இக் காணி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here