ஓட்டமாவடி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு அலுவலக முகாமைத்துவம் தொடர்பான பயிற்சிப் பட்டறை

0
100

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான அலுவலக முகாமைத்துவம் தொடர்பான பயிற்சி பட்டறையொன்று நேற்று (11) ம் திகதி செவ்வாய்க்கிழமை உதவி பிரதேச செயலாளர் ஏ.சீ. அகமட் அப்கர் தலைமையில் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதில் வளவாளர்களாக சட்டத்தரணியும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் நிர்வாக உத்தியோகத்தருமான எச்.எம்.எம். பாரூக் மற்றும் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.ஏ.அப்துல் ஹமீட் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

இப் பயிற்சிப்பட்டறையில் பிரதேச செயலகத்தில் கடமை புரியும் ஏராளமான உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

(எச்.எம்.எம்.பர்ஸான்)

(பட உதவி எம்.ஐ.எம்.றியாஸ்)

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here