வாருங்கள் ஏறாவூரைச் சேர்ந்த ஆறுவயது சிறுமி சீமாவின் உயிர்காக்க உதவுவோம்.

0
455

(எச்.எம்.எம்.பர்ஸான்)

ஏறாவூர் மீராகேணி வீதியில் வசிக்கும் ரமளான் இஸ்ஸத்தீன் என்பவரின் ஆறுவயது  மகள் பாத்திமா சீமா குறுதிப்புற்றுநோயால் கொழும்பு மஹரம வைத்தியசாலையில் தற்போது சிகிச்சை பெற்றுவருகின்றார்.

ஏறாவூர் மீராகேணி பசீர் சேகுதாவூத் வித்தியாலயத்தில் முதலாம் தரத்தில் கல்விகற்று வரும் குறித்த மாணவி இரண்டு மாதங்களாக கொழும்பு மஹரம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

இன்னும் நான்கு மாதங்கள் அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெறவேண்டும் என்று வைத்தியர்கள் கூறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து மூன்றுவருடங்கள் தொடர்ச்சியாக கிளினிக் கொண்டுவர வேண்டும் என்றும் தேவைப்படும் பட்சத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கிகிச்சையளிக்க வேண்டும் என்றும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே கூலித்தொழில் செய்துவரும் நான்கு பிள்ளைகளின் தந்தையான குறித்த நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுமியின் தந்தை தற்போது பொருளாதார ரீதியில் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் உள்ளதாக தெரியவருகிறது.

எனவே இவ்விடயங்களைக் கருத்திற்கொண்டு குறித்த சிறுமியின் சிகிச்சைக்காக உதவ நாம் அனைவரும் முன்வருவதோடு சீமாவின் நோயினை அல்லாஹ் குணப்படுத்த நாம் அனைவரும் அல்லாஹ்விடம் பிராத்திப்போம்.

தொடர்புகளுக்கு

0758853177
(சிறுமி சீமாவின் தந்தை இஸ்ஸத்தீன்)           

 

கணக்கு இலக்கம்:

123200260038055, மக்கள் வங்கி (நளீமா அஹ்மத் உசன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here