கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவினால் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு.

0
448

(எச்.எம்.எம்.பர்ஸான்)

கல்குடா பகுதிகளில் வசிக்கும் சுயதொழில் புரிவோரின் தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் நோக்கில் இணங்காணப்பட்ட சுயதொழில் முயற்சியாளர்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (12) ம் திகதி புதன்கிழமை மீராவோடை தாருஸ்ஸலாம் ஜும்ஆப் பள்ளிவாயலில் இடம்பெற்றது.

கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவுக்கு கிடைக்கப்பெற்ற ஸகாத் நிதியிலிருந்து இவ் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது. இதில் பலசரக்கு கடை தொழில் புரிவோருக்கான பொருட்கள், தையல் இயந்திரம், இடியப்பம் அவிக்கும் உபகரணம், சீமெந்து பக்கெட், மற்றும் நிதியுதவிகள் போன்றவைகள் வழங்கி வைக்கப்பட்டது.

தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதர உதவிகள் வழங்கி வைக்கும் இந்நிகழ்வில் ஜம்இய்யாவின் பொதுத் தலைவர் ஏ.எல்.பீர் முகம்மட் காசிமி, பிரதித் தலைவர் எஸ்.எச்.அறபாத் ஸஹ்வி, செயலாளர் எம்.பீ.எம். முபாரக் அதிபர், பொருளாளர் ஜே.எம்.இம்தியாஸ் மற்றும் உறுப்பினர்களான எம்.ரீ.அப்துர் ரகுமான் அஸ்ஹரி, யூ.எல்.ஷாஜஹான் நஹ்ஜி, மற்றும் சமூக சேவை இணைப்பாளர் ஏ.ஆர்.நவாஸ் காசிமி ஆகியோர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here