ஓட்டமாவடி ஷாஹிராவுக்கு தரிப்பிட வசதியுடன் கூடிய புதிய வடிவிளான நுழைவாயில்

0
305

(றிப்கான் அஹமட் )

ஓட்டமாவடி ஷாஹிரா வித்தியாலயத்துக்கு புதிய வடிவிளான் நுலைவாயில் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் கீழ் இளைஞர் கழக நிதி ஒதுக்கீட்டின் கீழ் வருடா வருடம் நடைபெறும் கிராம சக்தி வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் 14.09.2018ஆந் திகதி வெள்ளிக்கிழமை அல் இஸ்லாஹ் இளைஞர் கழக தலைவர் எம்.எம். சம்ஹான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ. அமிஸ்டீன் (அஸ்மி) அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக கோறளைபற்று மேற்கு பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜுத் கலந்து கொண்டார். மேலும் விஷேட அதிதிகளாக அல் இஸ்லாஹ்வின் நிர்வாக உறுப்பினர்கள், பாடசாலை அதிபர் எம்.ஏ அபூதாஹிர், இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.ஐ.எம். பஷீல்,அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எப். சமீறா ஆகியோருடன் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களும் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்த கௌரவ தவிசாளர் ஜனாப். ஐ.ரீ. அமிஸ்டீம் (அஸ்மி) அவர்கள் உரையாற்றுகையில், பாடசாலை காணிகளை பெற அவர் செய்த முயற்சிகள் மற்றும் பாடசாலை வீதிகளில் ஏற்படும் விபத்துக்களை குறைப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருவதாக கூறினார்..

இத்திட்டமானது பாடசாலையின் மதில், நுழைவாயில் அமைப்பு உட்பட விபத்துக்களை தடுக்கும் வகையில் பெற்றார் தங்கள் பிள்ளைகளை அழைத்து செல்லும் வரை தரித்திருப்பதற்கான ஏற்பாடுகள் என இத்திட்டம் குறிப்பிட்ட காலப்பகுதியில் சிறப்பாக வடிவமைக்கப்பட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here