முதலாவது போட்டியில் 124 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை அணி.

0
450

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி 137 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

நேற்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 261 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்துள்ளது.

அந்த அணி சார்பாக முஷ்பிகுர் ரஹீம் 144 ஓட்டங்களையும், மொஹமட் மிதுன் 63 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்துவீச்சில் இலங்கை அணியின் லசித் மாலிங்க 23 ஓட்டங்களுக்கு 04 விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.

அதன்படி இலங்கை அணிக்கு 262 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 35.2 ஓவர்களில் சகல விக்கட்டுக்களை இழந்து 124 ஓட்டங்களை மட்டுமே பெற்ற போட்டியில் தோல்வியடைந்தது.

14 வது ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் நேற்று டுபாயில் ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here