ஜனாதிபதி ஶ்ரீ லங்கன் கஜுவுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நாட்டின் முக்கிய பிரச்சினைகளுக்கும் வழங்க வேண்டும் ; நாமல் MP

0
195

ஶ்ரீ லங்கன் விமான சேவையின் கஜுவுக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பிரச்சினைகளுக்கும் ஜனாதிபதி வழங்க வேண்டும் என ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டின் தேசிய பாதுகாப்பு இபொருளாதரம் என பல்வேற்றுபட்ட விடயங்களில் பாரிய சிக்கல் நிலை தோன்றியுள்ள இந்த சந்தர்ப்பத்தில் நாட்டின் ஜனாதிபதி கஜு விடயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பேசியுள்ளது வியப்பாக உள்ளது.குறித்த விடயத்தினை ஶ்ரீ லங்கன் விமான சேவை முகாமைத்துவத்திற்கு தொலைபேசி போட்டு சொல்லி இருந்தால் கூட அவர்கள் அதற்கு எதிராக நடவடிக்கை எடுத்திருப்பார்கள். நாட்டில் பூதாகரமாக பல்வேறுபட்ட பிரச்சினைகள் தலை துக்கியுள்ள நிலையில் இதே கரிசனையை ஜனாதிபதி மற்ற விடயங்களிலும் காட்டமல் இது போன்ற விடங்களை துக்கிப்பிடிப்பது வியப்பான விடயமாகும்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒரு ஜனாதிபதி இதுபோன்ற சிறிய விடயங்களுக்கு மாத்திரம் முக்கியத்துவம் வழங்கி பேசக்கூடிய வகையில் அரசாங்கத்திற்குள் அவரது நிலை காணப்படுகிறதா ? என்ற கேள்வி எமக்கு எழுகிறது.

பல்வேறுபட்ட விடயங்களுக்காக பல்வேறுபட்ட தரப்புகளில் இருந்தும் அரசாங்கத்திற்கு எதிராக விரல்கள் நீட்டப்படும் போது நான் நேரகாலத்தோடு நித்திரைக்கு சென்றுவிட்டேன் அல்லது பத்திரிகையில் பார்த்தே தெரிந்துகொண்டேன் என கூறும் ஒரே நாட்டுத்தலைவர் என்றால் அது ஜனாதிபதி மைத்திரிபாலவாக தான் இருக்க முடியும்.

ஶ்ரீ லங்கன் விமானத்தில் வழங்கப்பட்ட கஜுவுக்கு கொடுத்த அதே முக்கியத்துவத்தை நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பிரச்சினைகளுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால கொடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here