அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்குடா இளைஞசர் அமைப்பின் ஏற்பாட்டில் கயிறு இழுத்தல் போட்டி நிகழ்ச்சி.

0
398

(எச்.எம்.எம்.பர்ஸான்)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்குடா இளைஞசர் அமைப்பின் ஏற்பாட்டில் கயிறு இழுத்தல் போட்டி நிகழ்ச்சி இன்று (16) ம் திகதி ஓட்டமாவடி அமீர் அலி பொது விளையாட்டு மைதானத்தில் ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதில் கல்குடா பகுதியிலுள்ள ஒவ்வொரு வட்டாரத்திலிருந்தும் ஒவ்வொரு அணியினர் கலந்து கொண்டனர். தொடர்ந்தும் மூன்று நாட்களாக நடைபெறவுள்ள இப்போட்டியின் இறுதி நிகழ்வு எதிர்வரும் 30ம் திகதி இரவுநேரப் போட்டியாக இடம்பெறவுள்ளது.

இறுதிப் போட்டிக்கு பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here