அஸ்மினின் ஊடக இணைப்பாளர் மிரட்டியதாக பெண் செய்தியாளர் பொலிஸில் முறைப்பாடு

0
260

(பாறுக் ஷிஹான்)

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மினின் ஊடக இணைப்பாளர் என்.எம் அப்துல்லாஹ் என்பவரால் தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் தனக்கு விடுக்கப்பட்டதாக தெரிவித்து குடாநாட்டு பத்திரிகை ஒன்றின் அலுவலகச் செய்தியாளரான செல்வி சோபிகா பொன்ராஜா யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளார்.

முதலமைச்சரின் சொல்லைக் கெட்டு செய்தி போடுகிறீர்கள். அடுத்த மாதம் 30ஆம் திகதி பெரிய கலவரம் இருக்கு. அப்ப தெரியும் உங்களுக்கு என்று அப்துல்லா தன்னை தொலைபேசி ஊடாக அச்சுறுத்தினார் என இன்று(17) முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

எனவே இந்த அச்சுறுத்தல் தொடர்பில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அஸ்மினின் ஊடக இணைப்பாளர் அப்துல்லாவை அழைத்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப் பத்திரிகையின் அலுவலகச் செய்தியாளர் தனது முறைப்பாட்டில் கேட்டுள்ளார்.

வலம்புரிப் பத்திரிகையின் செய்தியால் தனக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். அது தொடர்பில் வலம்புரிப் பத்திரிகையின் ஆசிரியர் நல்லையா விஜயசுந்தரம் கடந்த 3ஆம் திகதி யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்குச் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
அத்துடன், அந்த முறைப்பாடு கிடைப்பில் போடப்பட்ட நிலையில் அந்தப் பத்திரிகையின் பெண் செய்தியாளர் இன்று இந்த முறைப்பாட்டை வழங்கியுள்ளார்.

மேலும் நாளை வடக்கு மாகாண சபை உறுப்பினர் மீது குறித்த பத்திரிகை ஆசிரியரும் முறைப்பாடு ஒன்றை செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here