வாழைச்சேனையில் 24 மணித்தியாலங்களும் இயங்கும் சுய வங்கிச் சேவை.

0
312

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

மட்டக்களப்பு வாழைச்சேனை மக்கள் வங்கி கிளையில் திங்கள் கிழமை (17) சுயவங்கி சேவை பிரிவு ஆரம்பித்து வைக்கப்ட்டது.

வங்கி முகாமையாளர் டி.தனஸ்கரன் தலைமையில் நடைபெற்ற, நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சுயவங்கி சேவையினை ஆரம்பித்து வைத்தார். இதன்போது மக்கள் வங்கி பிராந்திய முகாமையாளர் என்.சிறிக்காந்தா மற்றும் உதவிப் பிராந்திய முகாமையாளர், என்.கோடிஸ்வரன் ஆகியோர்களும் அதிதிகளாக நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இவ்வங்கிச் சேவைப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டதினால், வாடிக்கையாளர்கள் 24 மணித்தியாலங்களும் தங்களது வங்கிச் சேவையினை மேற்கொள்ள முடியும்.

பணம் மீளப்பெறல், பணம் வைப்பு, கட்டணங்களுக்கான பணக் கொடுபனவு மொபைல் ரீலோட்கள் கணக்குகள் இடையே பணப்பரிமாற்றம், மொபையில் காசு அனுப்புதல், அட்டைமூலமான கட்டணக் கொடுப்பனவுகள், மின்சாரக் கட்டணம்,தண்ணீர் கட்டணங்கள்,தொலைபேசி கட்டணங்கள், என பல்வேறுபட்ட சேவைகளை இதன் மூலம் பெற்றுக் கொள்ளமுடியும் என இவ் வங்கியின்; முகாமையாளர் தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here