நான்கு வருட அபிவிருத்தித் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்.

0
93

(முகம்மட் பயாஸ்)

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட செம்மண்ணோடை, மாவடிச்சேனை, வட்டார அபிவிருத்தி தொடர்பான ஊர்ப்பிரமுகர்களுடனான விசேட சந்திப்பு ஒன்று இன்று புதன்கிழமை செம்மண்ணோடை மாவடிச்சேனை வட்டார பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.ஏ  கபூர் அவர்களின் தலைமையில் செம்மண்ணோடை கிராம அபிவிருத்திச் சங்க கட்டடத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் செம்மண்ணோடை மாடிச்சேனை கிராமத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொள்வது தொடர்பாக இணைப்பாளர் ஐ சபீக் அவர்களும், முன்னாள்  வேட்பாளர்  ஏ.எம்.சப்ராஸ், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.ஏ. கபூர், விவாகப் பதிவாளர் யூ.எல் லெதீப் ஹாஜியார், கிராம அபிவிருத்தி சங்க உப தலைவரும் அரசியல் ஆலோசகருமான எம்.எம்.எம்.  பரீட், கி அ ச செயலாளர் றிழ்வான் வலது குறைந்தோர் சங்க தலைவி ஜெமிலா,உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

இதன் போது செம்மண்ணோடை மாவடிச்சேனை கிரமாமம் எதிர் காலத்தில் எவ்வாறான பௌதீக வளங்களை கொண்டு அமைய வேண்டும் ஊரின் தேவைகள் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பற்றி மக்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு பிரதேச சபை உறுப்பினர் கபூர் அவர்களின் ஊடாக பிரதேச சபை உத்தியோகத்தர்களிடம் திட்டங்கள் கையளிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here