நன்றி நவிலல் – ராபிதாவின் மட்டக்களப்பு மாவட்ட இஜ்திமா- 2018

0
393

அல்லாஹ்வுடைய பேருதவியினால் கடந்த 21/ 9 /2018 ஆம் திகதி நடைபெற்ற ராபிதாவின் மட்டக்களப்பு மாவட்ட இஜ்திமா
நாம் எதிர்பார்த்ததை விடவும் மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ் .

இந்த இஜ்திமா சிறப்பாக நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய ஜம்இய்யாவின்
அனைத்து நிர்வாகிகளையும் எமது குறுகிய அழைப்பை மதித்து இவ் இஜ்திமாவில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு எம்மை உற்சாகப்படுத்திய உள்ளூர், வெளியூர் சகோதரர்கள், எமது வேண்டுகோளை ஏற்று பொருளாதார உதவி செய்த சகோதர்கள், தொண்டர் அடிப்படையில் களப்பணியாற்றிய சகோதரர்கள் அனைவரையும் இத்தருணத்தில் நன்றியோடு நினைவு கூர்கின்றேன் .

எமது நிர்வாகிகளும் ஜம்இய்யாவின் கீழுள்ள ஏனைய பள்ளிவாயல்களின் நிர்வாகிகளும் இத்திஹாதின் உலமாக்களும் வழங்கிய பெரும் ஒத்துழைப்பும் எமது சகோதரர்களின் பொருளாதார பங்களிப்பும் தொண்டர்களின் உழைப்பும் எமது பிரேதச மட்ட அரசியல் பிரதிநிதிகள் தமது அதிகாரத்தை பயன்படுத்தி செய்த உதவிகளுமே இவ் வெற்றிக்கு காரணமாக அமைந்தன என்பதனை யாரும் மறக்க முடியாது.

அந்த வகையில் இந்த இஜ்திமாவின் பணிகளை பெரும் சிரமங்களுக்கு மத்தியில் தியாக உணர்வுடன் மேற்கொண்ட அனைத்து சகோதரர்களுக்கும் ஜம்இய்யாவின் அலுவலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கும் விசேடமாக நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

இதுபோன்ற ஒத்துழைப்பை நாம் தொடர்ச்சியாக வழங்கும்போது மென்மேலும் வெற்றிகளை நாம் அடையலாம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இந்த
இஜ்திமாவில்
கலந்து கொண்ட அம்பாறை மாவட்ட சகோதரர்கள் மற்றும் காத்தான்குடி, ஏராவூர் பிரதேசங்களைச் சேர்ந்த சகோதரர்களும் இந்த இஜ்திமா சிறப்பாக நடைபெற்றதாகக் கூறியதுடன் இதனை எந்தக் குறைகளும் இன்றி ஏற்பாடு செய்த எமக்கு அவர்களது நன்றிகளையும் தெரிவித்தனர்.

விஷேடமாக ராபிதாவின் நிறைவேற்றுக் குழுவினர் இஜ்திமா எதிர்பார்த்ததைவிட சிறப்பாக நடைபெற்றதாகவும் ஒழுங்கமைப்பு யாவும் சிறப்பாக அமைந்திருந்ததாகவும் குறிப்பிட்டு தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்.

இந்த வெற்றிக்கு காரணமாக அமைந்த எமது ஐக்கியமும் ஒத்துழைப்பும் தொடர வேண்டும் என பிரார்த்திப்பதோடு எமது முயற்சிகளை அல்லாஹ் இஹ்லாஸுடன் செய்யப்பட்ட முயற்சியாக அங்கீகரித்து நம் அனைவரதும் நன்மைத் தராசில் இதனைச் சேர்த்து வைப்பானாக எனப் பிரார்த்திக்கின்றேன். ஆமீன். வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன். ஜஸாகுமுல்லாஹுஹைரா.

இவ்வண்ணம்
ஜம்இய்யாவின் அனைத்து நிருவாகிகள் சார்பாக..
அஷ்ஷெய்க் ஏ.எல் .பீர் முஹம்மத் காசிமி
பொதுத் தலைவர்
JDIK

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here