அமைதிப் புயல் கலை மன்றத்தின் கலை விழாவும் கலைஞர்கள் கௌரவிப்பு நிகழ்வும்

0
195

(அகமட் எஸ். முகைடீன்)

அமைதிப் புயல் கலை மன்றத்தின் கலை விழாவும் கலைஞர்கள் கௌரவிப்பு நிகழ்வும் கலை மன்றத்தின் தலைவரும் நாவிதன்வெளி கலாசார சபையின் பொதுச் செயலாளருமான ஏ.எல்.எம். இம்தியாஸ் தலைமையில் (24) திங்கட்கிழமை சாளம்பைக் கேணி-03 அஸ்ஸிறாஜ் மகா வித்தியாலய அரங்கில் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர்களான எம்.பி.நவாஸ், ஏ.பி.சுபைதீன் நாவிதன்வெளி பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் எம்.எச்.ஹிபானா, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாவிதான்வெளி அமைப்பாளர் ஏ.சி.நிஸார் ஹாஜி, பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ பாவா, சமய மற்றும் பள்ளிவாசல் தலைவர்கள், கலை மன்றத்தின் உறுப்பினர்கள், மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது தற்காலத்தில் மாணவர்களின் கல்வி தங்கியிருப்பது ஆசிரியர்களிடமா அல்லது பெற்றோர்களிடமா என்னும் தலைப்பில் அரச உத்தியோத்தர்களின் விஷேட பட்டிமன்றம் நடைபெற்றது. அத்தோடு விழிப்புணர்வு நாடகங்கள் அரங்கேற்றப்பட்டதோடு மற்றும் பல கலை கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

மேலும் இதன்போது கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டு நினைவுச் சின்னங்கள் வழங்கிவைக்கப்பட்டன. அத்தோடு பிரதி அமைச்சர் ஹரீஸின் சேவையினைப் பாராட்டி மத்திய முகாம் 12 ஆம் கொளனி நூரானிய ஜூம்ஆ பள்ளிவாசல், ஹைரியா ஜூம்ஆ பள்ளிவாசல் மற்றும் மஸ்ஜிதுல் ஹூதா ஜூம்ஆ பள்ளிவாசல் ஆகியன இணைந்து நினைவுச்சின்னம் வழங்கி கௌரவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here