ACMC ஒரு கட்டமைப்போடும் இதய சுத்தியோடும் செயற்படுகின்ற கட்சியாக இருந்து வருகின்றது – ஓட்டமாவடியில் அமைச்சர் ரிசாத்.

0
251

(எச்.எம்.எம்.பர்ஸான்)     

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி இந்த சமுதாயத்தை விடிவின் பாதையிலே வெற்றியின் பாதையிலே சமத்துவமாக, சகோதரத்துவமாக, ஏனைய சமூகங்களோடு சேர்ந்து வாழுகின்ற ஒரு நல்ல சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்கும் எல்லோருக்குமுரிய உரிமைகளை, அதேபோன்று அடிப்படை வசதிகளை, அடிப்படை தேவைகளை, வாழ்வதற்கு தேவையாக இருக்கின்ற தொழில் வாய்ப்பை இன்னோறென்ன பணிகளையெல்லாம் பெற்றுக் கொடுக்கின்ற ஒரு கட்டமைப்போடு இதய சுத்தியோடு செயல்படுகின்ற கட்சியாக நமது மக்கள் காங்கிரஸ் கட்சி இருந்து வருகின்றது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

ஓட்டமாவடி அமீர் அலி பொது விளையாட்டு மைதானத்தில் கல்குடா இளைஞர் அமைப்பு ஏற்பாடு செய்த உதைப்பந்து மற்றும் கயிறிழுத்தல் போட்டிகளின் இறுதிப் போட்டி நிகழ்வு (30) ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் அங்கு உரையாற்றுகையில்,

இந்த நாட்டின் வரலாற்றிலே ஒரு குறுகிய காலத்துக்குள்ளே உருவாக்கப்பட்டு இந்த சமாதான சூழ்நிலையிலே மிகவும் வேகமாக வளர்ந்து வருகின்ற ஒரு கட்சியாக நமது கட்சி இன்று தமிழ் சிறுபான்மையாக, வடகிழக்கிலே வாழுகின்ற சிங்கள மக்களையும் அதே போல பெரும்பான்மையாக வாழுகின்ற தமிழ்ச் சகோதர்களையும், முஸ்லிம் சமுகத்தையும் ஒரே குடையின் கீழே ஒன்று சேர்த்து பயணிக்கின்ற இயக்கமாக இந்தக் கட்சி இருந்து கொண்டிருக்கிறது.

எனவே இளைஞர் சமுதாயம் நாளை பிழையான பாதையிலே சென்றுவிடக் கூடாது இந்த இளைஞர் சமுதாயத்தை சரியான பாதையிலே கட்டியெழுப்ப வேண்டிய, கொண்டு செல்ல வேண்டிய தார்மீகப் பொறுப்பு இருக்கின்ற காரணத்தினால் இந்தக் கட்சியுடைய இளைஞர் அணி இன்று பலப்படுத்தப் பட்டு இவ்வாறானவொரு அழகான முறையில் திட்டமிட்டு கல்குடாவில் இளைஞர் அணி செயற்படுகின்றது இதே போன்று  தொடர்ந்தேர்ச்சியாக நாடு முழுக்க இந்த ஏற்பாடுகள் நடைபெற இருக்கின்றது அதற்கான அடித்தலத்தை இந்தப் பிரதேச இளைஞர் குழாம், நமது கட்சியுடைய ஆரம்பப் போராளிகளாகிய நீங்கள் அதைச் செய்திருக்கின்றீர்கள் என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியளிக்கின்றது என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here