ஓட்டமாவடி ரேஞ்சர்ஸ் விளையாட்டுக்கழகம் நடாத்தும் கிரிக்கெட் சுற்றுத்தொடர்.

0
683

(எச்.எம்.எம்.பர்ஸான்)

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ரேஞ்சர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் இருவது அணிகள் பங்குபற்றும் இருபது ஓவர்கள் கொண்ட கடினப்பந்து கிரிக்கட் சுற்றுத் தொடர் ஒன்றினை எதிர்வரும் (5) ம் திகதி வெள்ளிக்கிழமை ஓட்டமாவடி அமீர் அலி பொது விளையாட்டு மைதானத்தில் நடாத்த திட்டமிட்டுள்ளது.

இத் தொடர் தொடர்பான விசேட சந்திப்பு ஒன்று இன்று (3)ம் திகதி புதன்கிழமை மீராவோடை அந்நூர் கேட்போர் கூட்டத்தில் கழகத் தலைவரும் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் பிரதித் தவிசாளருமான யூ.எல்.அஹமட் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இவ் விசேட சந்திப்பில் சுற்றுத்தொடரில் பங்குபற்றும் கழகங்களுடைய தலைவர்கள், செயலாளர்கள், கிரிக்கட் வீரர்கள் போன்றோர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் நடைபெறவிருக்கும் கிரிக்கட் சுற்றுத் தொடர் தொடர்பான விளக்கங்களை ரேஞ்சர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் உப தலைவரும் இச் சுற்றுத்தொடரின் தலைவருமான ஏ.எம்.ரஹீம் வருகை தந்த ஏனைய கழக நிருவாகத்தினருக்கும், வீரர்களுக்கும் விபரித்துக் கூறினார்.

நடைபெறவுள்ள அனைத்துப் போட்டிகளும் சர்வதேச விதிமுறைகள் அடிப்படையில் நடைபெறும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here