நாவலடி மர்க்கஸ் அந்நூர் கல்வி நிறுவன மாணவர்களுக்கு சீருடைத்துணி வழங்கி வைப்பு.

0
231

(எமது செய்தியாளர்)

ஓட்டமாவடி – நாவலடி மர்க்கஸ் அந்நூர் கல்வி நிறுவன மாணவர்களுக்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சின் அனுசரணையில் சீருடைத்துணி வழங்கும் நிகழ்வு இன்று (4) இடம் பெற்றது.

இந்நிகழ்வில் அதிதிகளாக கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரேதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில், கிழக்கு மாகாண முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சின் பிரதிநிதி ஏ.எல். ஜுனைட் (நளீமி), கல்குடா ஜம்இய்யத்துத் தஃவதில் இஸ்லாமிய்யாவின் பொதுத் தலைவரும், கலாசார உத்தியோகத்தருமான அஷ்ஷெய்ஹ் ஏ.எல். பீர்முஹம்மட் (காஸிமி), கலாசார உத்தியோகத்தர் ஸியாத், மர்கஸ் அந்நூர் கல்வி நிறுவனத்தின் அதிபரும் கல்குடா ஜம்இய்யத்துத் தஃவதில் இஸ்லாமிய்யாவின் நிருவாகத் தலைவருமான அஷ்ஷெய்ஹ் ஏ.ஹபீப் (காஸிமி),மர்கஸ் அந்நூர் கல்வி நிறுவனத்தின் பிரதிஅதிபர் அஷ்ஷெய்ஹ் வீ.ரீ.எம். முஸ்தபா (தப்லீகி) மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here