கலகலப்பாக நடைபெற்று முடிந்தது வாழைச்சேனை ஆயிஷாவின் ஆசிரியர் தின நிகழ்வு.

0
189

(எச்.எம்.எம்.பர்ஸான்)

சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்த ஆசிரியர் தின நிகழ்வு (5) ம் திகதி வெள்ளிக்கிழமை பாடசாலையின் அதிபர் எம்.ரீ.எம்.பரீட் அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

குறித்த பாடசாலையில் கடமையாற்றிவரும் ஆசிரியர்கள் தங்களுடைய அனுபவப் பகிர்வுகளை மேடையில் முழங்கச் செய்தனர்.

அத்தோடு நகைச்சுவை நாடகம், சுவாரஸ்ய போட்டிகள் என அனைத்து நிகழ்ச்சிகளும் சபையோரை மகிழ்வித்தது.

சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்த இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.கே.ரகுமான் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் ஏ.ஆர்.முகைதீன் (ஆசிரியர்), உப செயலாளர் சீ.ஏ.ஏ.பாரிஸ், அல்ஹாஜ் காதர் ஆகியோர்கள் உட்பட ஆசிரியர்கள், மாணவிகள் எனப்பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here