(விசேட நிருபர்)
எம்.பீ.ஸீ.எஸ்.வீதி செம்மண்ணோடையில் பல்லாண்டு காலமாக நம்பிக்கையோடு திகழ்ந்துவரும் மொடர்ன் டெயிலர்ஸ்யின் ஏற்பாட்டில் மீராவோடை அமீர் அலி வித்தியாலயத்தில் கடமையாற்றி வரும் ஆசிரியர்களுக்கு அன்பளிப்பு பொருட்கள் இன்று (8) ம் திகதி வழங்கி வைக்கப்பட்டது.
சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு குறித்த மொடர்ன் நிறுவனத்தினால் வழங்கி வைக்கப்பட்ட அன்பளிப்பு பொருட்களை அதன் உரிமையாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மீராவோடை மேற்கு வட்டாரக் குழுத் தலைவரும், கடற்றொழில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சின் இணைப்பாளருமான ஐ.எம்.றிஸ்வின் கலந்து கொண்டு வழங்கி வைத்தார்.
பாடசாலையின் அதிபர் எம்.எம்.மஹ்ரூப் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வட்டாரக் குழு உறுப்பினர்கள், மொடர்ன் டெயிலர்ஸ் ஊழியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர் குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் இன்று மொடர்ன் டெயிலர்ஸ்யினால் இனிப்புப்பண்டங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.