தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் ஓட்டமாவடி ஹிஜ்றாவில் ஒன்பது மானவர்கள் சித்தி

0
208

(ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்)

அண்மையில் வெளியான தரம் ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்ச்சையில் ஓட்டமாவடி மூன்றாம் வட்டார ஊட்டல் பாடசாலையான ஹிஜ்றா வித்தியாலயத்தில் இம்முற்றை அதி கூடிய வெட்டுப்புள்ளியாக 164 புள்ளிகள் நிர்ணாயிக்கப்பட்டும் ஒன்பது மாணாவர்கள் சித்தி அடைந்துள்ளமை பாடசாலையின் வரலாற்றில் அதற்கு கிடைத்துள்ள பாரிய வெற்றியாகவும் சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டு வந்த அதன் முதல்வர் செய்னப்பு ஹமீட்டின் நிருவாக திறமைக்கு கிடைத்துள்ள பரிசாகவும் பார்க்கப்படுகின்றது.

அத்தோடு சுமார் 150 தொடக்கம் 163 புள்ளிகளை பெற்று மேலும் 11 மாணாவர்கள் துரதிஸ்ட்ட வசமான நிலைக்கு உள்ளாகி இருப்பது மிகவும் கவலை அளிக்க கூடிய விடயமாக இருக்கும் அதே நேரத்தில் இம்முறை குறித்த பாடசாலையில் இருந்து 63 மாணாவர்கள் பரீட்ச்சைக்கு தோற்றியதில் குறித்த சித்தியடைந்த விகிதமானது பாடசாலைக்கு கிடைத்துள்ள பெரும் வெற்றியாகவே உள்ளது.

மேலும் குறித்த மாணவர்களை நேர்த்தியான முறையில் பயிற்றுவித்து பரீட்ச்சைக்கு தயார்படுத்திய எம்.எல்.எம்.அமீன் ஆசியரின் பங்கு மிகவும் பாராட்டத்தக்க விடயமாகவும் எதிர்காலத்தில் அவருடைய சேவை குறித்த பாடசாலைக்கும் பிரதேசத்திற்கும் இன்றியமைதாத ஒன்றாகவும் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here