சாதனை மாணவி ஹைராவுக்கு பிரதிக் கல்விப் பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர் நேரில் சென்று வாழ்த்துத் தெரிவிப்பு.

0
217

(எச்.எம்.எம்.பர்ஸான்)

இம்முறை வெளியான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் அதிகூடிய 191 புள்ளியைப் பெற்று வலயத்தில் முதலிடமும் மாவட்டத்தில் ஆறாமிடத்தையும் பெற்று சாதனை படைத்த வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய மாணவி எம்.யூ.ஹைராவை மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர் அவர்கள் நேரில் சென்று வாழ்த்தினையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

சாதனையினை நிலைநாட்டிய மாணவியை வாழ்த்திப் பாராட்டிய பிரதிக் கல்விப் பணிப்பாளர் தொடர்ந்தும் அம் மாணவி கல்வியில் இன்னும் இன்னும் சாதனைகள் படைத்து கல்வியில் முன்னேற மாணவிக்கு ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

படத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர், பாடசாலை அதிபர் எம்.ரீ.எம்.பரீட், சாதனை மாணவி எம்.யூ.ஹைரா மற்றும் மாணவியின் தந்தை எம்.எல்.எம்.உவைஸ் ஆசிரியர் ஆகியோர்களைக் காணலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here