ஓட்டமாவடி மூன்றாம் வட்டாரத்துக்கு இன்றுமுதல் வெளிச்சம்!

0
309

(எச்.எம்.எம்.பர்ஸான்)

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட ஓட்டமாவடி மூன்றாம் வட்டாரத்தில் ஒளிராமல் பழுதடைந்த நிலையில் காணப்பட்ட மின்குமிழ்களை இன்று ஒளிரச்செய்து அப் பிரதேச மக்களின் நீண்டநாள் தேவையினை பிரதேச சபையின் உப தவிசாளர் யூ.எல்.அஹ்மட் லெப்பை மேற்கொண்டார்.

குறித்த பகுதிகளில் பொது மக்கள் இரவு நேரங்களில் தங்களுடைய தேவைகளை மேற்கொள்வதற்கு மிகவும் சிரமத்துக்கு மத்தியில் வசித்து வந்தனர்.
குறித்த தேவைப்பாட்டை பொதுமக்கள் உப தவிசாளரிடம் வேண்டிக்கொண்டதற்கிணங்க உடனடியாக உப தவிசாளர் யூ.எல்.அஹ்மட் லெப்பை இவ் வேலைத்திட்டத்தை மேற்கொண்டார்.

இன்று (10) ம் திகதி புதன்கிழமை குறித்த பகுதிகளுக்கு மின்குமிழ்களை பொருத்தும் பணியில் தன்னந்தனியாக ஆராவாரம் இல்லாமல் உரிய வாகனம் பழுதடைந்த நிலையிலும் சிறியரக உழவு இயந்திரமூடாக சபை ஊழியர்களின் ஒத்துழைப்புடன் தமது பணியை மேற்கொண்டார்.

இவ் வேலைத்திட்டத்தினை மேற்கோள்வதற்கு உதவிய தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி மற்றும் செயலாளர் எச்.எம்.ஹமீம் ஆகியோர்களுக்கு அப் பிரதேச மக்கள் சார்பாக உப தவிசாளர் யூ.எல்.அஹ்மட் லெப்பை நன்றிகளை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here