கிணறுகளை மூட நுளம்பு வலைகள் வழங்கி வைப்பு.

0
172

கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட செம்மண்ணோடை 208D கிராம சேவகர் பிரிவில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் அம்கோர் நிருவனத்தின் அனுசரணையில் கிணறுகளை மூடுவதற்கான வலை வழங்கும் நிகழ்வு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் காரியாலயத்தில் இன்று (11) ம் திகதி நடைபெற்றது.

இந் நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம சேவை அதிகாரி, சமுர்த்தி உத்தியோகத்தர், பொதுச் சுகாதார பரிசோதகர் மற்றும் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.ஏ.கபூர் அம்கோர் நிருவன உத்தியோகத்தர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.

இதில் கிணறு பாவிக்கும் பயனாளிகல் ஏறாளமானோர் வருகை தந்து வலைகளைப் பெற்றுச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

தகவல்
எம்.ஐ.எம். முஸம்மில்
பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்
208D செம்மண்ணோடை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here