தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு அல்-மினா வித்தியாலயத்தில் புத்தகக் கண்காட்சி

0
241

(அபூ அனூஸ்)

கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் அனுசரணையில் மீராவோடை பொது நூலகத்தின் ஏற்பாட்டில் இன்று (11.10.2018) பதுரியநகர் அல்-மினா வித்தியாலயதில் வாசிப்பு மாத நிகழ்வும் புத்தக கண்காட்சியும் இடம்பெற்றன.

மீராவோடை பொது நூலக நூலகர் திரு க. ருத்ரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ.அமீஸ்தீன் பிரதம் அதிதியாக கலந்துகொண்டதுடன் பிரதேச சபையின் உறுப்பினர் திருமதி எஸ்.எல். பாயிஷா மற்றும் சபையின் செயலாளர் எச்.எம்.எம். ஹமீம், பாடசாலை அதிபர் எல்.ரீ.எம்.சாதிக்கீன், சனசமூக நிலைய உத்தியோகத்தர் திரு. தேவநேசன், ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொண்டதுடன் மற்றும் ஆசிரியர்கள், முன்பள்ளி ஆசிரியைகள், பிரதேச சபை ஊழியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்களுக்கு நூலக அங்கத்துவப்படிவங்கள் இலவசமாக வழங்கப்பட்டதுடன் பிரதேசத்திலுள்ள அனைத்து பாடசாலை மாணவர்களும் நூலகத்தில் கட்டனமின்றி இணைத்துக்கொள்ளும் நடமுறையினை எதிர்காலத்தில் செடற்படுத்தவுள்ளதாக தவிசாளர் தனது உரையின் போது தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here