ஜமால் கஷோக்கி விவகாரம் தொடர்பில் உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும்

0
261

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் அறிக்கை

சவூதி அரேபியாவைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கிஇ துருக்கியிலுள்ள சவூதி தூதரகத்திலிருந்து காணாமல் போனதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சவூதி அரேபியாவும் துருக்கியும் உண்மையை வெளிக் கொண்டுவர வேண்டியது அவசியமாகும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவதுஇ

சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி கடந்த ஒக்டோபர் 2 ஆம் திகதி துருக்கியிலுள்ள சவூதி தூதரகத்தினுள் தனிப்பட்ட அலுவல்கள் நிமித்தம் சென்ற சமயம் அங்கிருந்து வெளியில் வரவில்லை என முறையிடப்பட்டுள்ளது. இச் சம்பவம் நடந்து சுமார் 18 நாட்கள் கடந்துவிட்ட போதிலும் இதுவரை ஜமால் கஷோக்கிக்கு நடந்தது என்ன என்பது பற்றிய உறுதியான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

உள்நாட்டு மற்றும் சர்வதேச ஊடகவியலாளர்களின் நலன்கள் தொடர்பில் அக்கறை கொண்ட அமைப்பு என்ற வகையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் இவ்விவகாரம் தொடர்பில் தனது கவனத்தைச் செலுத்தியுள்ளது. அதேபோன்று சர்வதேச ஊடகங்களும் ஊடகவியலாளர்களின் உரிமைகளுக்காக செயற்படும் நிறுவனங்களும் இந்த விவகாரம் தொடர்பில் கூடுதல் அக்கறையை வெளிப்படுத்தியுள்ளன.

இந் நிலையில் ஜமால் கஷோக்கி தூதரகத்தினுள் வைத்து கொல்லப்பட்டதாக சவூதி அரேபிய அரசாங்கம் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனினும் இதனை சவூதி முற்றாக மறுத்துள்ளது. தற்போது சவூதி அதிகாரிகளும் துருக்கி நாட்டு அதிகாரிகளும் இந்த சம்பவம் தொடர்பில் கூட்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதன் மூலம் ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கிக்கு நடந்தது என்ன என்பது தொடர்பான உண்மை வெளிவரும் என நம்புகிறோம்.

ஊடகவியலாளர்களின் கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் எந்தவொரு செயற்பாட்டையும் ஒருபோதும் அனுமதிக்கவோ ஆதரிக்கவோ முடியாது. ஊடகவியலாளர்களின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்க வேண்டியது சகல அரசாங்கங்களினும் பொறுபு என்பதையும் வலியுறுத்த விரும்புகிறோம் என்றும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here