நிசாம்டீன் கைது செய்யப்பட்டமைக்கு அவுஸ்திரேலிய கிரிக்கட் வீரர் ஒருவரின் சகோதரருக்கு தொடர்பு

0
244

அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட இலங்கை இளைஞர் மொஹமட் நிசாம்டீன் மீது சுமத்தப்பட்ட பயங்கரவாத குற்றச்சாட்டு சம்பவத்தில் அவுஸ்திரேலிய கிரிக்கட் வீரர் ஒருவரின் சகோதரருக்கு தொடர்பிருப்பதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

மொஹமட் நிசாம்டீன் பயங்கரவாத தாக்குதலுக்கான திட்டங்களைக் கொண்டுள்ளதாகவும் அத் திட்டம் தொடர்பான ஆவணம் ஒன்றை வைத்திருந்ததாகவும் கூறி கடந்த ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி சிட்னியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

குறித்த குற்றச்சாட்டின் வழக்கு விசாரணையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த மொஹமட் நிசாம்டீன் தற்போது முழுமையாக பயங்கரவாத குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந் நிலையில் அவுஸ்திரேலிய வீரர் ஒருவரின் நெருங்கிய சகோதரர் ஒருவர் குறித்த பயங்கரவாத குற்றச்சாட்டில் மொஹமட் நிஸாம்தீனை சிக்க வைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போது இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்இ அவரை கைது செய்வதற்கு போதுமான ஆதாரங்கள் தற்போது திரட்டப்பட்டுள்ளதாகவும் அந்த நாட்டு பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

அட\

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here