முன்னாள், இந்நாள் ஜனாதிபதிகளை ஒற்றுமைப்படுத்தியவர்களின் பெயர்ப்பட்டியலில் அதாஉல்லாவின் பெயரும் இடம்பிடித்துள்ளது

0
240

(றியாஸ் ஆதம், எஸ்.அஷ்ரப்கான்)

இந்த நாட்டினுடைய தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆகியோரை ஒற்றுமைப்படுத்தி உறுதியான அரசாங்கமொன்றை இந்நாட்டிலே ஏற்படுத்துவதற்கு பெரும்பங்காற்றியவர்களில், தேசிய காங்கிரசின் தலைவர் அதாஉல்லாவும் ஒருவராவார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான அரசாங்கமொன்றை ஏற்படுத்துவதற்கு இரு அணிகளாக பிரிந்து செயற்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினரை ஒன்றுபடுத்துவதற்கு நியமிக்கப்பட்ட குழுவில் அதாஉல்லாவும் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிளவுபட்டிருந்த சுதந்திரக்கட்சி நாட்டினதும், மக்களினதும் நன்மைகருதி இன்று ஒற்றுமைப்பட்டுள்ளது, அதன்நிமிர்த்தம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்னாள் ஜனாதிபதி பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறான வரலாற்று நிகழ்வு ஒன்று இடம்பெறுவதற்கு அதாஉல்லாவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டவராவார். அதனால் அவரது பெயரும் வரலாற்றில் தடம்பதித்துள்ளது. இவ்விரு தலைவர்களையும் ஒற்றுமைப்படுத்தும் பொருட்டு தனது நிலைப்பாட்டை அதாஉல்லா கடந்த காலங்களில் பகிரங்கமாகவே வெளிப்படுத்தி வந்தார்.

நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டதன் பின்னர், அதாஉல்லா தனது உரையின் ஒவ்வொறு சந்தர்ப்பத்திலும் இதனை வலியுறுத்தி வந்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பிளவுபட்டிருப்பது ஐக்கிய தேசியக்கட்சிக்கு மாத்திரமே நன்மை எனவும், அந்தப்பிளவு நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் பாரியதொரு இழப்பாகும் எனவும் அதாஉல்லா குறிப்பிட்டார்.

ஒன்றாக இருந்து இந்த நாட்டை வழிநடாத்திய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பிளவு பட்டிருப்பதனையும், அக்கட்சியின் முன்னாள், இந்நாள் தலைவர்கள் பிரிந்து செயற்படுவதனையும் அனுமதிக்க முடியாது ஆகவே அவர்களை ஒன்றுபடுத்தி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான அரசாங்கமொன்றை உருவாக்குவதன் மூலமே மக்களும்,நாடும் நன்மையடையும் எனவும் அவர் கடந்த காலங்களில் சூளுரைத்தார்.

பிரதமர் ரணில் இராஜனமாச் செய்ய வேண்டும், அப்படி செய்யாது விட்டால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தாவது அவரை வெளியேற்ற வேண்டுமென குரல் கொடுத்த முஸ்லிம் தலைமைகளில் அதாஉல்லா முதன்மையானவர்.

ரணில் விக்ரமசிங்க இராஜினமா செய்தால் அல்லது வெளியேற்றப்பட்டால் இந்த நாட்டிலே உறுதியான ஆட்சி ஒன்றினை ஏற்படுத்த முடியும் எனவும் அதாஉல்லா அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அவர் கூறிய விடயங்கள் ஒவ்வொன்றாக நடந்துகொண்டிருப்பதனை அவதானிக்க முடிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here