முப்பது வருடங்களுக்கு பிறகு கல்முனை இளைஞர் விளையாட்டுக்கழகம் தங்கப் பதக்கத்தை பெற்றுச் சாதனை

0
106

(எஸ்.அஷ்ரப்கான்)

கல்முனை இளைஞர் விளையாட்டுக் கழகம் இணை சம்பியனாகத் தெரிவாகி தங்கப் பதக்கத்தை பெற்றுச் சாதனை நிலைநாட்டியது.

மாத்தறை விளையாட்டு மைதானத்தில் பதுளை இளைஞர் விளையாட்டுக் கழகத்தினரை எதிர்த்து கடந்த (26-10-2018) நடைபெற்ற 30வது தேசிய இளைஞர் உதைப்பந்தாட்ட இறுதிப்போட்டி நடைபெற்றது.

நாடாளாவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களிலும்பிரதிநிதிதுவப்படுத்தி 18 கழகங்கள் போட்டியிட்டன. இதில் கல்முனை இளைஞர் விளையாட்டுக்கழகத்தினர் இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சகல போட்டிகளிலும் விளையாடுவதற்கு உரிய பயிற்சிகளையும் உதவி மற்றும் ஆலோசனைகளையும் கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர் ஏ.எம். அப்றாஜ் றிழா மற்றும் குறித்த கல்முனை இளைஞர் கழகத்தின் தலைவர் எம்.ஏ.எம்.றியால் ஆகியோர் மேற்கொண்டு இந்த வரலாற்றுச் சாதனைக்கு வித்திட்டிருந்தமை குறிப்பிடத் தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here