ஜனாதிபதியின் வழிகாட்டலில் ஓட்டமாவடி முகைதீன் ஜும்ஆப் பள்ளி வளாகத்தில் மரம் நாட்டப்பட்டது.

0
179

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

நாட்டின் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவின் வழிகாட்டலில் மரம் நடுவோம் நாட்டைக் காப்போம் என்னும் தொனிப்பொருளில் மரம் நடுகை திட்டம் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது.

இதனடிப்படையில் இலங்கை ஜமாஅதே இஸ்லாமி ஓட்டமாவடி மன்றமும், ஓட்டமாவடி ஜும்ஆப் பள்ளிவாயலும் இணைந்து ஜும்ஆத் தொழுகையின் பின்னர் 26 வெள்ளிக்கிழமை ஓட்டமாவடி ஜும்ஆப் பள்ளி வளாகத்தில் நாட்டப்பட்டது.

இதன்போது இலங்கை ஜமாஅதே இஸ்லாமி ஓட்டமாவடி மன்றம் மற்றும் ஓட்டமாவடி ஜும்ஆப் பள்ளிவாயல் ஆகியவற்றின் நிருவாக சபை உறுப்பினர்கள், பிரதேச பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது பழ மரங்கள் மற்றும் தென்னை மரங்கள் என்பன கலந்து கொண்டவர்களால் பள்ளி வளாகத்தினுள் நாட்டப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here