குப்பைகூளங்கள் தேங்கியுள்ள வடிகானை சீர்செய்ய தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி நடவடிக்கை.

0
154

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மீராவோடை மேற்குப்பகுதியில் காணப்படும் (லங்கா ஸ்டோர்ஸ் வீதி) வடிகாங்களில் குப்பைகளும் கற்களும் அடைபட்டுக் காணப்படுவதால் வீதிகளிலிலிருந்து வடிகானுக்குள் மழைநீர் வடிந்தோடுவது தடைப்பட்டுள்ளது. இதனால் பல வீதிகள் மழைநீர் தேங்கி நின்று போக்குவரத்துக்கு இடைஞ்சலாக காணப்படுகிறது.

குறித்த பகுதிகளில் காணப்படும் குறைபாட்டை கவனத்திற்கொண்ட மீராவோடை மேற்கு வட்டாரக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்களின் இணைப்பாளருமான ஐ.எம்.றிஸ்வின் இவ் விடயத்தை கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி அவர்களிடம் தெரியப்படுத்த தவிசாளர் குறித்த இடங்களை இன்று (5) ஆம் திகதி நேரடி விஜயமொன்றினை மேற்கொண்டு அங்கு காணப்படும் குறைபாட்டை உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here