ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் தேசிய வாசிப்பு நிகழ்வின் பரிசளிப்பு விழா

0
68

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் நடைபெற்ற பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு பாடசாலையின் பிரதான மண்டபத்தில் மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக் அவர்களின் வழிகாட்டலில் பிரதி அதிபர் ஏ.எல்.கபீர் அவர்களின் மேற்பார்வையில் நூலகப் பொறுப்பாசிரியர் எம்.எல்.எம்.இப்ராஹிம் மதனி அவர்களுடைய தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாடசாலையிலுள்ள ஏராளாமான மாணவர்கள் கலந்து கொண்டதோடு ஆசிரியர்கள், பகுதித் தலைவர்கள், நூலக ஊழியர்கள் ஆகியோர்களும் கலந்து சிறப்பித்தனர்.

நடைபெற்று முடிந்த போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here