திடீர் வெள்ளமும், தவிசாளர் ஐ.ரீ.அஸ்மியின் அதிரடி நடவடிக்கையும்.

0
173

கடந்த இரு தினங்களாக பெய்து வரும் அடைமழை காரணமாக ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் குடியிருப்புக்கள், பாடசாலைகள் என பல இடங்கள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளன. இந்நிலையினை கவனத்திற் கொண்டு நேற்றைய தினம் விடுமுறையாக இருந்தும் அனைத்து பிரதேச சபையின் ஊழியர்களும் கௌரவ தவிசாளர் ஐ.ரீ. அஸ்மி அவர்களின் அவசர அழைப்பின் பேரில் தவிசாளருடன் இணைந்து வெள்ள அனர்த்த மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று ஏற்பட்ட வெள்ளத்தினால் மூழ்கிய அனேகமான பகுதிகளை கடற்றொழில் நிரியல்வள மற்றும் கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் கெளரவ எம்.எஸ்.எஸ் அமீர் அலி.அவர்களின் ஆலோசனையின் பேரிலும், கௌரவ தவிசாளரின் பணிப்புரையின் பேரிலும் பிரதேச சபை ஊழியர்களின் பெரும் முயற்சியினால் வெள்ள நீரை வடிந்தோடச் செய்து சீரான நிலைமைக்கு கொண்டு வர முடிந்தமை குறிப்பிடத்தக்கது.

சிறப்பாக செயற்பட்ட கெளரவ தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், பிரதேச சபையின் ஊழியர்கள், சுகாதார பிரிவு மேற்பார்வையாளர்கள் மற்றும் விசேடமாக சுகாதார பிரிவு ஊழியர்களுக்கும் ஓட்டமாவடி 1ம் வட்டார அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வட்டாரக் குழு சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

எஸ்.எம். றிஸ்வி
செயலாளர்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
வட்டாரக்குழு
ஓட்டமாவடி 01.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here