சேதமுற்றுக் காணப்படும் வடிகான் மூடிகளும் வீணாக்கப்படும் மக்களின் பணமும். #ஓட்டமாவடி

0
184

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச நிர்வாக எல்லைக்குட்பட்ட அக்பர் பள்ளிவாயல் வீதியிலுள்ள வடிகான் மூடிகள் நீண்ட காலமாக திருத்தியமைக்கப்படாது கவனிப்பாறற்ற நிலையில் காணப்படுகிறது.

தற்போது நிழவும் காலநிலை மாற்றமும் அதிக மழை வீழ்ச்சியும் காரணமாக வீடுகளினுள் நீர் தேங்கி காணப்படுவதுடன் வடிகானுக்குள் வீட்டிலுள்ள நீர் ஓட முடியாத நிலையும் காணப்படுகின்றது.

இவ்வடிகான் பலதடவைகள் திருத்தியமைக்கப்பட்டும் திருத்தியமைக்கப்பட்ட சில காலங்களிலேயே மீண்டும் மீண்டும் சேதமைடயும் நிலையானது தரமற்ற தொழிநுட்பத்தினையும் வினைத்திறமற்ற வேலையினையும் காட்டுவதாக மக்ககள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இதனை குறித்த அதிகாரிகள் கவனத்தில் கொண்டு சீரமைத்துத் தரும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here