வாழைச்சேனை போக்குவரத்து சாலை ஊழியர்கள் கொட்டும் மழையில் வேலை நிறுத்த போராட்டம்

0
154

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

லங்கை போக்குவரத்து சாலை ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் இன்று வியாழக்கிழமை நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில் வாழைச்சேனை போக்குவரத்து சாலை ஊழியர்கள் சாலை முன்பாக கொட்டும் மழையில் வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்போது எங்களது அடிப்படைச் சம்பளத்தை சமப்படுத்து, அதிகரித்த சம்பளத்தை உடன் வழங்கு, இலங்கை போக்குவரத்து சாலை வாழைச்சேனை ஊழியர்களின் சேவை இடை நிறுத்தம் போன்ற வாசகங்களுடன் கொட்டும் மழையில் போராட்டத்தை நடாத்தினர்.

போக்குவரத்து சாலை ஊழியர்களின் சம்பள உயர்வு கடந்த ஒக்டோபர் மாதம் அதிகரித்து தருவதாக வாக்குறுதி வழங்கிய நிலையில் இன்றுவரை இவர்களுக்கான சம்பளம் எதுவும் அதிகரிக்கப்படவில்லை.

இந்த அரசாங்கத்தின் போக்குரவத்து அமைச்சர் ஒக்டோபர் மாதத்தில் இருந்து சம்பளத்தை அதிகரித்து தருவதாக கூறியும் இன்னும் அமைச்சு உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கவலையாக இருக்கின்றது என ஊழியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

எங்களது சம்பளத்தை அதிகரித்து தராது இருக்கும் பட்சத்தில் எங்களது வேலை நிறுத்த பேராட்டம் தொடர்ந்த வண்ணமே காணப்படும் என ஊழியர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

இலங்கை போக்குவரத்து சாலை ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக பாடசாலை மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள் உட்பட பலர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இப்போராட்டம் தொடருமானால் மக்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here