இழிவான விமர்சங்களை செய்து சொந்த இலாபங்களை அடைந்து கொள்ள எவரும் முயற்சிக்க வேண்டாம் – ஏ.ஜி.அஸீஸுல் றஹீம்

0
161

(றிஸ்வான் இப்றாஹீம்)

கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் அடைமழை மற்றும் வெள்ளத்தால் நாட்டின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டு மக்கள் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், கிழக்கின் பல பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதன்காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் தமது இருப்பிடங்களை இழந்து நிர்க்கதியாகியுள்ளனர்.

குறிப்பாக, மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பாலைநகர் ஸக்காத் கிராமும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், குடியிருப்பு மனைகளுக்குள் நீர் புகுந்து அங்குள்ள மக்களும் இடம்பெயர வேண்டிய சூழ்நிலையேற்பட்டது.

பாதிக்கப்பட்ட ஸக்காத் கிராம மக்களைப் பாதிப்பிலிருந்து மீட்டு, தற்காலிக இடங்களில் தங்க வைக்கத்தேவையான ஏற்பாடுகளை கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜி.அஸீஸுல் றஹீம் மேற்கொண்டதுடன், அவர்களுக்கான உணவு ஏற்பாடுகளும் மற்றும் குறிப்பிட்டுச்சொல்ல முடியாத மனிதாபிமான உதவிகளையும் செய்து கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், ரஹ்மத் நகர், அறபாத் ஆகிய பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் தன்னாலான உதவிகளை பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜி.அஸீஸுல் றஹீம் மேற்கொண்டு வருகிறார்.

இப்பாரிய பணியில் பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜி.அஸீஸுல் றஹீமுடன், பிரதேச சபை உறுப்பினர் ஐ,எல்.பதுர்தீனும் இணைந்து ஒத்துழைப்பு வழங்கியதுடன், முஸ்லிம் காங்கிரஸின் கல்குடாத்தொகுதி அமைப்பாளர் எச்.எம்.எம்.றியாழின் பங்களிப்பும் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.எம்.றியாஸ் அலுவலக ரீதியான உதவி, ஒத்துழைப்புக்களும் பாராட்டுக்குரியது.

அதே நேரம் மக்களின் துயரங்களில் பங்கெடுத்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜி.அஸீஸுல் றஹீமும் அவரது ஆலோசனைக்குழுவினரும் தம்மாலான முழுப்பணிகளையும் மேற்கொண்ட போதும் சம்பந்தமில்லாத ஒரு சிறு குழுவினர் விசமப்பிரசாரங்களை முன்னெடுத்ததன் காரணமாக இதனை ஊடக மயப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டதாக இக்குழு அங்கத்தவர் ஒருவர் தெரிவித்தார்.

அத்தோடு, மக்கள் பாதிப்புற்று உயிர்ச்சுறுத்தலகளை எதிர்கொண்டுள்ள நிலையில் இவ்வாறான இழிவான விமர்சங்களை செய்து சொந்த இலாபங்களை அடைந்து கொள்ள எவரும் முயற்சிக்க வேண்டாமென பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜி.அஸீஸுல் றஹீம் வினயமாகக் கேட்டுக் கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here