டெங்கு அற்ற சிறந்த பிரிவாகசாய்ந்தமருது – 01 தெரிவு! கிராமஉத்தியோகத்தர் இல்பான் கௌரவிப்பு!

0
154

(றியாத் ஏ.  மஜீத்)

சாய்ந்தமருது பிரதேச  சுகாதாரவைத்திய அதிகாரிகாரியாலயத்தினால் டெங்கு அற்றசிறந்த கிராம உத்தியோகத்தர்பிரிவாக சாய்ந்தமருது – 01 தெரிவுசெய்யப்பட்டு அதன் கிராமஉத்தியோகத்தர் எஸ்.எம். இல்பானைகெளரவிக்கும் நிகழ்வு இன்று (09) வெள்ளிக்கிழமை சுகாதார வைத்தியஅதிகாரி காரியாலயத்தில் இடம்பெற்றது.

சாய்ந்தமருது பிரதேச சுகாதாரவைத்திய அதிகாரி டாக்டா் ஏ.எல்.எம்.அஜ்வத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொதுச் சுகாதார பாரிசோதகா் எம்.எம்.பாறூக், சாய்ந்தமருது பிரதேச செயலக கிராம சேவக நிர்வாக உத்தியோகத்தர் எம்.ஜெளபர் உள்ளிட்ட கிராமஉத்தியோகத்தர்கள், சுகாதார வைத்திய அதிகாரி  காரியாலய  உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனா்.

இதன்போது கிராம உத்தியோகத்தர்எஸ்.எம். இல்பானுக்கு சாய்ந்தமருதுபிரதேச சுகாதார வைத்திய அதிகாரிடாக்டா் ஏ.எல்.எம்.அஜ்வத்தினால்  நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here