கிழக்கு மாகாண ஆளுநர் நாளை (10) மட்டக்களப்பு விஜயம்

0
158
எஸ்.அஷ்ரப்கான்)
கடந்த சில நாட்களாக பெய்து வரும் அடை மழையினால் மட்டக்களப்பு மாவட்டம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு, மாவட்டத்தின் பல பகுதிகளிலும் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக பெய்துவரும், அடை மழையினால் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. சில பாடசாலைகளும் நீரில் மூழ்கியுள்ளது. குறிப்பாக பாடசாலைகளில் மூன்றாம் தவணைப்பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், மாணவர்களும் தற்போது பாடசாலைக்கு செல்வதில் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் சுபையிர் குறித்த அனர்த்தம் தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு வந்ததனையடுத்து கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ றோஹித்த போகொல்லாகம நாளை (10) மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். இதன்போது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களையும் ஆளுநர் பார்வையிடவுள்ளதுடன், அரச அதிகாரிகளுடனும் இதுதொடர்பில் கலந்துரையாடவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here