ஈரானில் அஹ்வாஸ் பகுதியை சேர்ந்த 22 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

0
250

எம்.ஐ அன்வர் (ஸலபி)

கடந்த செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி ஈரான்-ஈராக் போர் நினைவு தின இராணுவ அணிவகுப்பை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை அடுத்து சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட ஈரானின் ஆக்கிரமிப்பு பகுதியாக திகழும் அஹ்வாஸ் மாநிலத்தைச் சேர்ந்த 22 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. எந்த வித உரிய விசாரணைகளும் மேற்கொள்ளாது நிறைவேற்றப்பட்டிருக்கும் குறித்த தண்டனையை எதிர்த்து சர்வதேச அளவில் கண்டன குரல்கள் எழும்பியுள்ளன.

குறித்த தற்கொலை தாக்குதலுக்கு அஹ்வாஸ் விடுதலைப் போராட்ட அரபு இயக்கம் உரிமை கோரியிருந்த நிலையிலேயே இந்த மரண தண்டனையை ஈரான் அரசு எந்தவித விசாரணையும் இன்றி சிவில் மக்கள் மீது மேற்கொண்டுள்ளது. அரேபிய அடிப்படையை கொண்ட பெரும்பான்மை மக்கள் வாழும்
அஹ்வாஸ் மாநிலத்தில் ஸுன்னி முஸ்லிம்கள் ஈரானின் ஷீஆ அரசால் அரசியல் பொருளாதார நெருக்கடிகளையும், வாழ்வியல் துன்பங்களையும் அனுபவித்துவரும் நிலையில் அவர்களுக்கு அரபு மொழி பேசுவது, அரபு மொழியில் குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவது, பாடசாலைகளை நடத்துவது போன்ற விடயங்கள் பாரசீக ஈரான் அரசால் தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here