மக்களின் குரல்களுக்கு மதிப்பளியுங்கள்!

0
183

(எம்.எம்.ஏ.ஸமட்)

2015 ஆட்சி மாற்றத்தின் பின்னர் உருவாக்கப்பட்ட கூட்டு அரசாங்கத்தின் இரு பிரதான கட்சிகளுக்கிடையிலான முரண்பாடுகள், அமைச்சர்களின் நடவடிக்கைகள், கருத்துக்கள், பெரும்பான்மையினத்தைச்சார்ந்த ஒரு சில மதத் தலைவர்களின் எல்லைமீறிய செயற்பாடுகள், தொழிற்சங்கங்களின் போராட்டங்கள் என பல்வேறு விடயங்கள் தொடர்பிலான விமர்சனங்கள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி ஜனாதிபதியினால் ஏற்படுத்தப்பட்ட திடீர் ஆட்சி மாற்றமும் அதன் தொடராக நிகழ்ந்த சம்பவங்ளும் இவ்விமர்சனங்களை வீரியம் பெறச் செய்துள்ளதை அவதானிக்க முடிகிறது.
நாட்டில் அரசியல் அசாதாரண சூழ்நிலை உருவாகி ஏறக்குறைய ஒரு மாதகாலத்தை அண்மித்துள்ள நிலையில் நிறைவேற்று அதிகாரத்திற்கும் சட்டவாக்கத்திற்னுமிடையிலான சமர் இன்னும் சமரசத்திற்கு வரவில்லை.
சர்வமதத் தலைவர்களும், சிவில் அமைக்களும், புத்திஜீவீகளும் இவர்களுடன் உலகளாவிய ரீதியிலி வாழ்ந்து வரும் இலங்கைப் பிரஜைகளும், சர்வதேச நாடுகளும் கூட நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் விரைவில் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டுமென தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்
ஜனாதிபதியினால் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டு பின்னர் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்பின்னர் கலைப்பிற்கு எதிராக ஐக்கிய தேசிய முன்னணி உட்பட சிறிய மற்றும் சிறுபான்மைக் கட்சிகள், சிவில் அமைப்பக்களினால் உயர் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட மனுக்களின் அடிப்படையில் உயர் நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பெறபட்டு 14,15, மற்றும்16ஆம் திகதியில் கூடிய பாராளுமன்றத்தில் ஒக்டோபர் 26ஆம் திகதி ஜனாதிபதியினால் பிரதமராக நியமிக்கப்பட்;ட மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் போது பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமளிதுமளியானது இலங்கையின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தியிருக்கிறது. பாராளுமன்ற உறுப்பினர் சிலர் பாராளுமன்றத்தில் நடந்துகொண்ட விதமானது பாராளுமன்ற ஜனநாயகத்தையும், சிறப்புரிமையையும், கௌரவத்தையும், கலாசாரத்தையும் கேலிக்கூத்தாக்கியிருக்கிறது. அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்டு வந்த விமர்சனங்களையும் வீரியமடைச் செய்திருப்பதை அவதானிக்க முடிகிறது.

அவற்றுடன் தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் புதிய கட்சிகளின் உருவாக்கங்கள் என்பன குறித்தும், மக்கள் வாக்குகளைப் பெற்று மந்திரியானவர்களின்; மக்கள் நலன்சார் நடவடிக்கைகளில் காணப்பட்ட மந்த நிலை தொடர்பிலும், பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை வழங்குவதற்காக மக்களின் வாக்குகளைப் பெற்ற மக்கள் பிரதிநிதிகள் திரைமறைவில் எடுக்கின்ற நிலைப்பாடுகள் தொடர்பிலும் அவரவர் சமூகத்தின் மத்தியிலிருந்து அதிகளவிலான விமர்சனங்கள் சமூவ வலைத்தளங்கள் உள்ளிட்ட ஊடகங்கள்; வாயிலாக முன்வைக்கப்பட்டு வருவதையும் காண முடிகிறது.
விமர்சனம் என்பது மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டு முன்வைக்கப்படும் கருத்தாகும். அதில் நேர், எதிர் மறை தன்மைகள் காணப்படும.; விமர்சனங்கள் குறிப்பாக ஒரு தனிநபரை, செயலாக்கத்தை, படைப்பை, அமைப்பை, அரசியல் கட்சியை என பல்வேறு விடயங்களில் முன்வைக்கப்படுகின்றன. என்றாலும், தற்காலத்தில் விமர்சனத்திற்கு அதிகம் உள்ளாகின்ற விடயம் அரசியலும் அரசியல்வாதிகளுமாகும். ஏனெனில், மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக அம்மக்களின் எதிர்பார்ப்புக்களையும்  அபிலாஷைகளையும் நிறைவேற்றித்தருவதாக வாக்குறுதியளித்து அதிகாரத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர் அவற்றையெல்லாம் மறந்துவிட்டு அரசியலில் மிக மோசனமாகப் பயணிக்கின்ற மக்கள் பிரதிநிதிகள் சம்பிரதாயங்களை மீறி கட்சித் தாகவல்கள் உ;பட அவர்கள்pன் செயற்பாடுகள் வாக்களித்த மக்களையே தலைக்குணிவுக்குள்ளாக்கியிருப்பதுடன் எல்லை கடந்த விமர்சனங்களையும் எதிர்கொள்ளச் செய்து வருவதைக் காணலாம்.

இருப்பினும், இத்தகைய விமர்சனங்கள் வெற்று விமர்சனங்களல்;லாது ஆரோக்கியமான விமர்சனங்களாக அமைய வேண்டும். உரியவர்களின் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்தி. சமூகத்தின் பொறுப்புக் கூறல்களுக்கான பொறுப்பைச் சுமந்தவர்களாக செயற்படுவதற்கு இவ்விமர்சனங்கள் அர்த்தமுள்ளதாக அமைய வேண்டும்.
அர்த்தமுள்ள விமர்சனங்களே எதிர்பார்ப்புக்களை அடைந்துகொள்வதற்கான பாதைகளைத் திறக்க வழிகோலும். ஆனால், முன்வைக்கப்படுகின்றன விமர்சனங்கள் குறித்த தரப்புக்களின் எதிர்காலத்தை என்ன செய்யப் போகிறது என்பதை எதிர்வரும் தேர்தல்கள் தீர்மானிக்கும் என்ற எதிர்பார்ப்புமுள்ளது.
மக்கள் பிரதிநிதிகளின் அல்லது கட்சிகளினதும், அமைப்புக்களினதும் தலைமைகளின் செயற்பாடுகள் மக்களுக்கு நன்மையடைக் கூடியதாக அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் அவர்களால்; நிறைவு செய்யப்படாத நீண்ட கால மற்றும் சமகால அடிப்படைத் தேவைகளை, பிரச்சினைகளை மக்கள் மயப்படுத்திää அவர்களினூடாக மக்களின் தேவைகளைப் பெற்றுக்கொள்வதை ஊக்கப்படுத்தும் இலக்குடன்; விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றபோது அவை ஆரோக்கியமாக அமையும். அவர்களின் செயற்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்தும்..

விமர்சனங்களும் மதிப்பளித்தலும்

மக்களின் வாக்குகளைப் பெற்று அதிகாரத்துக் வந்தவர்களினால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெற்றுக் கொடுப்பதில் இழுத்தடிப்புச் செய்யப்படுகின்றபோது அல்லது அப்பிரச்சினைகள் தொடர்பில் மௌனம் காக்கின்றபோது அவற்றைச் சுட்டிக்காட்டி முன்வைக்கப்படுகின்ற விமர்சனங்கள் எதிர்பார்க்கின்ற விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.
அத்தகைய விமர்சனங்களை அவமானப்படுத்தாது அவற்றுக்கு மதிப்பளிப்பது சம்பந்தபபட்டவர்களின் தார்மீகப் கடப்பாடாகும். அக்கடப்பாடு நிறைவேற்றப்படாது காலதாமதமாக்கப்படுகின்றபோது சமூகத்தின் நலனில் உண்மையான அக்கறை கொண்டவர்களால் புதிய பாதைகள் உருவாக்கப்படுவது தவிர்க்க முடியாதது. தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகளினூடாகவும். பத்திரிகைள், சஞ்சிகைகள மற்றும் இணையத்தள செய்திச் சேவைகள், வட்செப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களினூடாவும் தற்கால அரசியல் நெருக்கடி, சமூக அபிவிருத்தி, சமூக நலன்கள், சமூக எழுச்சி மற்றும் சமூக மாற்றங்கள் தொடர்பில் ஆரோக்கியமான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றமையை காணக் கூடியதாகவுள்ளது.
இவ்;வாறு முன்வைக்கப்படுகின்ற அவ்விமர்சனங்கள் தமது கட்சியை அல்லது தலைமையின் செயற்பாடுகளை நெருக்கடிக்குள் தள்ளுவதாகக் கருதும் அரசியல் தலைமைகளினால் அவ்விமர்சனங்களை முன்வைக்கும் நபர்களின் கருத்துச் சுதந்திரங்களைப் பறிக்கும் செயற்பாடுகளும் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கு மற்றும் மலையகப் பிரதேசங்களிலிருந்து ஐக்கிய தேசிய முன்னணி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஏனைய தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மைக் கட்சிகள் சார்பாக போட்டியிட்டு பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டவர்கள் வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில், அவர்களை வெற்றிபெறச் செய்த மக்களின் அபிலாஷைகள் நிறைவு செய்யப்படுவதும் அவர்கள் தொடர்பாகவும் அவர்களின் கடந்த கால, சமககால நடவடிக்கைகள் தொடர்பிலும் முன்வைக்கப்பட்டு வருகின்ற நியாயமான விமர்சனங்களுக்கு மதிப்பளிக்கப்படுவதும் அவை தொடர்பில் சுயவிசாரணை; செய்யப்பட்டு ஆரோக்கியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதும் அவசியமாகும்.
ஏனெனில், கலைக்கப்பட்ட அரசாங்கத்தில் பங்காளிக் கட்சிகளாக அங்கம் வகித்து அமைச்சர்களாக இருந்த மக்கள் பிரதிகள் மக்களுக்குச் செய்த சேவையை விட அவர்கள் அடைந்து கொண்ட இலாபம் அதிகம் என்ற விமர்சனத்திற்கு மத்தியில் பாராளுமன்றத்தில் இரு பிரதான கூட்டுக் கட்சிகளும் பெரும்பான்மையப் பெற்றுக்கொள்வதற்கு முஸ்லிம் அரசியல் கட்சிகள் முன்வைத்துள்ள நிபந்தனைகள் என்ன என்ற கேள்விகளும். இந்நிபந்தனைகள் எழுத்து மூலமாக வழங்கப்பட்டு அவற்றுக்கு எழுத்து மூலமான உறுதிமொழி பெற்றப்பட்டுள்ளதா என்ற கேள்விகளுக்கு மத்தியில் முஸ்லிம் சமூகத்தி;;ன் நலனுக்கான ஆரதவல்லாது சுயநலத்திற்கான ஆதரவாக அமைந்து விடக் கூடாது என்பது மக்களின் குரலாகவும் விமர்சனமாகவுமுள்ளதை அவதானிக்கலாம்.

சிறுபான்மைக்கட்சிகளும் அரசியலும்

இந்நாட்டில் ஏறக்குறைய 70 வீதம் பெறும்பான்மையின சிங்கள சமூகத்தினரும் 30 வீதம் சிறுபான்மையினரான தமிழ், முஸ்லிம் மற்றும் ஏனைய சமூகத்தினரும் வாழுகின்றனர். இச்சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி 70 அரசியல் கட்சிகள் உள்ளன. இவற்றில் 21 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் சிறுபான்மைச் சமூகத்தைப் பிரதிநித்துவப்படுத்தும் கட்சிகளாகும்.
இக்கட்சிகளில் முறையாகச் செயற்படாத, விரல்விட்டு எண்ணக்கூடிய அங்கத்தவர்களைக் கொண்ட அல்லது நானே ராஜா நானே மந்திரி என்ற நிலையில் கட்சிகளை தேர்தலில் போட்டியிடுவதற்காக மாத்திரம் பதிவு செய்து ஒரு சில குறுகிய சுய இலாபத்தை அவற்றினூடாக அடைந்து கொள்வதற்காக தங்களை விசுவாசிக்கும் ஊடகவியலாளர்களைக் கொண்டு அல்லது தாங்களாகவே ஊடங்களுக்கு அறிக்கைகளை அனுப்பி அவற்றைப் பிரசுரிக்க செய்து பிரபல்யம் அடையும் கட்சிகளும் அக்கட்சியை வழிநடத்துவர்களும் விமர்சனங்களைச் செய்து வருகின்றனர். அவர்களின் இத்தகைய விமர்சனங்கள் சமூகத்திற்கு எத்தகைய பலனையும் அளிக்கப்போவதில்லை.
சிறுபான்மைக் கட்சிகள்; தனித்துவ அடையாளங்களோடும் தனித்துவ அடையாளங்களைத் தவிர்த்தும் பிரதான கட்சிகளோடு கூட்டுச் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டு பிரதிநிதித்துவங்களைப் பெற்றுக்கொள்கின்ற வழமை முஸ்லிம் அரசியல் கட்சிகளிடத்திலும் மலையகக் கட்சிகளிடமும் காணப்படுகின்றன. ஆனால்ää சில தமிழ் அரசியல் கட்சிகள் வடக்கு கிழக்கில் தனித்துப் போட்டியிட்டு பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொள்கின்ற மரபைக் கெண்டுள்ளன. அதிலும் குறிப்பாக ஐந்து கட்சிகளை உள்ளடக்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு( இரு கட்சிகள் பிரிந்துவிட்டன) வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தனித்துப் போட்டியிட்டு அதிக விருப்பு வாக்குகளைப் பெறும் கட்சியாக அதன் அரசியல் பயணத் தொடக்கத்திலிருந்து பயணத்து வருவதை அவதானிக்க முடிகிறது.
கடந்த பொதுத்தேர்தலில் தமிழ் சமூகத்தின் சார்பில் வடக்கு, கிழக்கு மலையக மாவட்டங்கள் மற்றும் கொழும்பு மாவட்டத்திலிருந்து எல்லாமாக 25 உறுப்பினர்கள் நேரடி மக்கள் வாக்குகளின் மூலம் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டனர். முஸ்லிம் சமூகத்தின் சார்பில் 15 உறுப்பினர்கள் மக்கள் வாக்குகளின் மூலம் நேரடியாகத் தெரிவு செய்யப்பட்டனர்.
தேசிய பட்டியல் உறுப்பினர்கள் தவிர்த்து மக்களின்; நேரடி வாக்களிப்பின் மூலம் தமிழ், முஸ்லிம் மக்கள் சார்பில் 40 உறுப்பினர்கள் 8வது பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த 40 பாராளுமன்ற உறுப்பினர்களும் அவர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு பொறுப்புக் கூறக் கடமைப்பட்டவர்கள் என்பதை மறந்து செயற்படுவது தர்மமாகாது.
இவ்விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தங்களுக்கு வாக்களித்த மக்களின் உரிமைகள் மற்றும் அபிலாஷைகள் தொடர்பில் ஆணித்தரமான கருத்துக்களையும் செயற்பாடுகளையும் முன்னெடுத்து வந்திருக்கிறது என்று கூறலாம். ஆனால், தனித்துவமிக்க சிறுபான்மை சமூகங்களில் ஒன்றான முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் அரசியல் கட்சிகள், தங்களது கட்சி நடவடிக்கைள் மற்றும் விசுவாசிகளின் நலன்களில் காட்டும் அக்கறையும் கரிசனையும் தமக்கு வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புக்களையும் அபிலாஷைகளையும் நிறைவேற்றுவதில் தவறிழைத்துக் கொண்டிருக்கிறார்கள் அல்லது வெளிப்படைத்தன்மையன்றி செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று முன்வைக்கப்படுகின்ற விமர்சனங்களை உதாசீனம் செய்ய முடியாது.
இந்நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியில் தங்களது ஆதரவானது முஸ்லிம்களின் நலன்களுக்கானதா அல்லது சுய, கட்சி அரசியல் நலனுக்கானதா என்ற சந்தேகமும் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் பரந்து காணப்டுவதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.
ஏனெனில், வாக்களித்த மக்களின் கோரிக்கைகள், விமர்சனங்கள் எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கொலி என்ற நிலையிலேயே கடந்த காலங்களில் காணப்பட்டிருக்கிறது. பஸ் போன பின் கை காட்டுகின்ற நிலை இந்நாட்களிலும்; நிகழக் கூடாது என்பதே புள்ளடியிட்ட மக்களின் பேராவாகவும், எதிர்பார்ப்பாகவும் காணப்படுவதை மறுதலிக்க இயலாது.

மக்களின்;; எதிர்பார்ப்புக்கள்

காலத்திற்குக் காலம் தேர்தல்கள் நடைபெறும்போது அத்தேர்தல்களில் மக்களின் வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவதற்காக வாக்குறுதிகள் அள்ளி வீசப்பட்டு அவ்வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த மக்களால் வெற்றி பெற்ற பின் ஆற்றைக் கடக்கும் வரை அண்ணன் தம்பி கடந்த பின் நீ யாரோ நான் யாரோ என்ற மனோநிலையில் அரசாங்கமும் பல மக்கள் பிரதிநிதிகளும் செயற்பட்ட வராலாற்றுப் பாடங்கள் இன்னும் வரலாற்று ஏடுகளாக அரசியல் ஏடுகளில் பதிவாகியிருக்கிறது.
இந்த ஏமாற்று வராலாறுகள் மாற்றியமைக்கப்பட வேண்டும். இவ்வராலாற்றை மாற்றி எழுத வேண்டும் என்பதற்காகவே கடந்த 2015 ஜனவரியில் இந்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. அதற்காக மக்கள் வாக்களித்திருந்தார்கள். ஆனால் அந்த மன நிலை கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி உடைக்கப்பட்டிருக்கிறது என்பதை இக்கூட்டாட்சி ஏற்பட வாக்களித்த வந்த மக்கள் வெளிப்படுத்தும் ஆதங்கங்கள் கூட அறியக் கூடியதாகவுள்ளது.

இலங்கையின் ஏனைய மாகாணங்களில் வாழும் மக்களை விடவும், வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பிரதேசங்களில் வாழும் மக்கள் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத பல தேவைகைளுடன் காலம் காலமாக வாழ்ந்து வருகிறார்கள். வாழ்வதற்கு வீடு, குடிப்பதற்கு நீர், வெளிச்சத்திற்கு மின்சாரம், போன்ற அடிப்படைத் தேவைகள், பெண்கள் மகளிர் எதிர்நோக்கும் வாழ்வாதரப் பிரச்சினைகள், படித்த இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வாய்ப்பு, சம்பள அதிகரிப்பு, வீதி அபிவிருத்தி, போக்குவரத்து, சுகாதாரம் போன்றவற்றில் காணப்படும் பிரச்சினைகள், பாடசாலைகளின் அபிவிருத்தி, கல்வி முன்னேற்றம் என நிறைவேற்ற வேண்டிய பல உடனடித் தேவைகள, குறுகிய, நீண்ட காலமாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் இப்பிரதேசங்களில் நிறைவேற்றப்படாது தேங்கிக் கிடைக்கின்றன.
இவ்வாறு சிறுபான்மையினரின் தீர்க்கப்படாத பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை வீண் போயுள்ளதான உணர்வில் மக்கள் இந்த அசாதாரண அரசியல் சூழ்நிலைகளை அவதானித்து வருகின்ற இக்கால கட்டத்தில்  முஸ்லிம் அரசியல் கட்சித் தலைமைகளினாலும், பாராளுமன்ற உறுப்பினர்களினாலும் வழங்கப்படுகின்ற ஆதரவு யாருடை பெரும்பான்மைப் பலத்தை அதிகரித்தாலும், அவ்வாதரவானது முஸ்லிம்களின் நலன் சார்ந்ததாகவும், முஸ்லிம்கள் எதிர்நோக்கும் உடனடி, குறுகிய, நீண்ட கால, பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான எழுத்து மூல உத்தரவாதமாகவும் இருக்க வேண்டுமே தவிர சுயநலன்களை வெற்றிகொள்வதற்கான ஆதரவாக அமைந்துவிடக் கூடாது என்பதே முஸ்லிம் வாக்களாப் பெருமக்களின் குரலாகவும், எதிர்பார்ப்பாகவும் விளங்குவதை அம்மக்களால் முன்வைக்கப்பட்டு வருகின்ற ஊடக விமர்சனங்களினூடாக அறிய முடிகிறது, வாக்களித்த மக்களின் குரல்களுக்கு மதிப்பளிப்படுவது முஸ்லிம் அரசியல் தலைமைகளின் தார்ப்மீகப் பொறுப்பாகும் என்பது சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

விடிவெள்ளி – 22.11.2018

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here