ஓட்டமாவடி தேசிய பாடசாலைக்கு பஸ் வண்டி கையளிக்கும் நிகழ்வு கட்டாரில் வெற்றிகரமாக நிறைவு.

0
125

ஓட்டமாவடி தேசிய பாடசாலைக்கு பஸ் வண்டி ஒன்றினை கையளிக்கும் பிரமாண்டமான நிகழ்வு நேற்று (23) கட்டார் பனார் கலாசார அரங்கில் இடம்பெற்றது.

பாடசாலையின் பழைய மாணவர் சங்க கட்டார் கிளையின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு பழைய மாணவர் சங்க கட்டார் கிளையின் தலைவர் எம்.ஐ.அஜ்மீர் மெளலவி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கட்டாருக்கான இலங்கைத்தூதரக ஆலோசகர் திரு கோகுல ரங்கன் கலந்து கொண்டு சிறப்பித்ததோடு.

ஏனைய அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எல்.ஏ.ஜுனைத், ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் அதிபர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக், கணித விஞ்ஞானப் பிரிவுத்தலைவர் எம்.எம்.நவாஸ், அஷ்ஷெய்க் எம்.பியாஸ் நளீமி ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here