இத்திஹாது பலாஹீன் கத்தார் கிளைக்கு புதிய நிருவாகிகள் தெரிவு.

0
229

(கத்தாரிலிருந்து நியாஸ் பலாஹி)

கத்தார் நாட்டில் தொழில் நிமிர்த்தம் சென்றுள்ள பலாஹிகளை உள்ளடக்கிய இத்திஹாது பலாஹீன் கத்தார் (IFQ) எனும் அமைப்பு சுமார் ஆறு வருட காலமாக மிகவும் சிறப்பான முறையில் தனது பணிகளை மேற்கொண்டு வருகிறது  அல்ஹம்து லில்லாஹ்.

இவ்வமைப்பானது இன்று 30-11-2018ம் திகதி ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து கத்தார் பழைய விமான நிலையப் பூங்காவில் 2019ம் ஆண்டுக்கான புதிய நிருவாகத்தெரிவு இடம்பெற்றது.

அஷ்ஷெய்ஹ் SACM.மாஹிர் பலாஹி தலைமையில் நடைபெற்ற புதிய நிருவாகிகளாக பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டனர்.

தலைவராக அஷ்ஷெய்ஹ் ALM. மாஹிர் ஹாபிஸ் பலாஹி, உப தலைவராக அஷ்ஷெய்ஹ் MBM. ஹாபிஸ் அஸ்பர் பலாஹி, செயலாளாராக அஷ்ஷெய்ஹ் ELM. நியாஸ் பலாஹி, உப செயலாளராக அஷ்ஷெய்ஹ், ஹாபிஸ் AFA. நப்ரீஸ் பலாஹி பொருளாளராக அஷ்ஷெய்ஹ், ஹாபிஸ் AMM. ஜௌஸ் பலாஹி, உப பொருளாளராக அஷ்ஷெய்ஹ் SM. ஆஷிக் பலாஹி ஆகியோர்களோடு ஏனைய நிருவாகிகளாக அஷ்ஷெய்ஹ், அல் ஹாபிஸ் MIM.சுஜாஹ் பலாஹி, அஷ்ஷெய்ஹ் SACM.மாஹிர் பலாஹி, அஷ்ஷெய்ஹ், ஹாபிழ் SAA. சாஜித் பலாஹி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here